Breaking News

கச்சபேஸ்வரர் நகரில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு...

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் நகரில் பகுதி நேர ரேஷன் கடையை காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி  எழிலரசன் திறந்து வைத்தார்.


காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட கச்சபேஸ்வரர் நகரில் 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட நியாயவிலை கட்டிடம் செயல்படாமல் இருந்ததால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள நியாய விலை கடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.


இந்நிலையில் கச்சபேஸ்வரர் நகரில் வசிக்கும் பொதுமக்கள் கட்டி முடிக்கப்பட்ட நியாயவிலைக்கடை திறந்து வைக்க வேண்டும் என காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி.எழிலரசனிடம் கோரிக்கை விடுத்தனர். 

அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த நியாயவிலை கட்டடத்தில் புதியதாக பகுதிநேரமாக நியாயவிலை கடையை இன்று காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி   எழிலரசன் திறந்துவைத்தார்.

குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசியபொருட்களை வழங்கும் பணியை துவக்கிவைத்து இனிப்புகளை வழங்கினார்.

இதனால் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் பயன்படுகின்றனர்.


இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட். கே.ஆறுமுகம், அவை தலைவர் சந்துரு, நகர நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments