காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 1,858 வாகனங்களை ஆயுதப்படை மைதானத்தில் காட்சி...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களில் உள்ள எவரும் உரிமைகோரப்படாத 1817 இருசக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 26 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,858 வாகனங்கள் உள்ளன.
![]() |
File Photo |
இவ்வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்து வாகனங்களை ஒப்படைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.எம்.சுதாகர், அவர்கள் உத்தரவிட்டும் வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க இயலவில்லை என்பதாலும், வாகனத்தை எவரும் உரிமை கோரவில்லை என்பதாலும், தொடர்ந்து இந்நிலையில், காவல்நிலையங்களில் இருப்பில் வைக்கப்பட்டிருந்தது.
உரிமைக்கோரப்படாத காவல் நிலையங்களில் உள்ள வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் மேற்படி வாகனங்களை ஏலமிட்டு அதன்மூலம் வரும் தொகையினை அரசு கணக்கில் செலுத்த ஏதுவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மேற்படி உரிமைகோரப்படாத 1,858 வாகனங்கள் குறித்து 14.12.2021 நாளிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி வாகனங்கள் அனைத்தும் வரும் 26.12.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலமிட ஏதுவாக காட்சிப்படுத்தப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள் எவரேனும் தங்களது வாகனம் ஏதேனும் காணவில்லையெனில் சம்மந்தப்பட்ட வாகன ஆவணத்துடன் வந்து ஆயுதப்படை மைதானத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ள வாகனத்துடன் சரிபார்த்துக்கொள்ள மேலும், ஒருவாய்ப்பாக காவல்துறை சார்பாக வழங்கப்படுகிறது என்பதை இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Post Comment
No comments
Thank you for your comments