Breaking News

ஈரோட்டில் உரிமைகோரப்படாதா வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

ஈரோடு, ஏப்.20-

ஈரோடு (கிழக்கு), வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்,  மீண்டும் திருத்தியமைக்கப்பட்ட நிபந்தனைகளுடன் பொது ஏலம் விடப்படுகிறது. 

போக்குவரத்து துறையில் வரிகட்டாத மற்றும் இதர குற்றங்களுக்காக பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் சிறை பிடிக்கப்பட்டு வாகன உரிமையாளர்களால் உரிமைகோரப்படாமலும், மற்றும் நிதியாளர்களால் விடுவிக்கப்படாமலும் நீண்ட காலமாக ஈரோடு (கிழக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 69 பல்வேறு வகையான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அந்த வாகனங்கள் அனைத்தும்  தற்போது இயக்க இயலாத நிலையிலும் மற்றும் துருப்பிடித்த நிலையிலும் உள்ளது, தமிழக தலைமைச் செயலர் அவர்கள் மற்றும் போக்குவரத்து ஆணையர் சென்னை அவர்களது சுற்றறிக்கையின் படி 11.04.2022 அன்று பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டு நிர்வாக காரணங்களுக்காக மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் திருத்தியமைக்கப்பட்ட நிபந்தனைகளுடன் கீழ்கண்டவாறு ஏலம்விட முடிவு செய்யப்பட்டுள்ளது. நிபந்தனைகள் அலுவலக அறிவிப்பு பலனையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் 21.04.2022 தேதிக்குப் பின்னர் ஈரோடு (கிழக்கு), வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.500/&  (ருபாய் ஐநூறு மட்டும்) செலுத்தி ஒப்பந்தப் புள்ளி விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.  ஏற்கனவேரூ.500/& கட்டணம் செலுத்தியவர்கள் கட்டண ரசீதினை சமர்ப்பித்து, புதிய ஒப்பந்தப் புள்ளி படிவத்தினை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.  27.04.2022&ம் தேதி மாலை 05.45மணி வரை புதிய ஒப்பந்தப் புள்ளி விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளின் படியே ஏலம் நடத்தப்படும்.  



ஒப்பந்தப்புள்ளிபவெம் சமர்ப்பித்தவர்கள் மட்டுமே பொது ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.  பொது ஏலம் முடிந்த பின்பே, ஒப்பந்தப் புள்ளிகள் பிரிக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும்.   பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப் புள்ளி விண்ணப்பங்களை 28.04.2022 மாலை  05.45 மணிக்குள் ஈரோடு (கிழக்கு), வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.


ஏலம் விடப்படும் வாகனங்களை அலுவலக வேலை நாட்களில் 21.04.2022 தேதி முதல் 28.04.2022 தேதி வரை ஈரோடு (கிழக்கு), வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்  பார்வையிடலாம்.   

29.04.2022 காலை ஈரோடு (கிழக்கு), வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காலை 11.00 முதல் மாலை 05.00 மணி வரையிலும் ஏலம் விடப்படும். ஏலம் குறித்த நிபந்தனைகள் ஈரோடு (கிழக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலக அறிவிப்புப் பலகையின் வாயிலாக பொதுமக்களுக்கு என ஈரோடு (கிழக்கு), வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பெ.வெங்கட்டரமணி தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments