வேலூர் மாவட்டத்தில் சட்டமும் நியாயமும் ஏளனமாக மாறும் சூழல்! - புரோக்கர்களின் பிடியில் சிக்கிய காவல் நிலையம்?
வேலூர், ஜூலை 14-
புரோக்கர் பிடியில் காவல்துறை?
வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒரு உதவி ஆய்வாளர், “ஹேப்பி” பெயர் கொண்டவர் புரோக்கர்களுடன் நெருக்கமாக செயல்பட்டு, உண்மையான குற்றவாளிகளை விடுவித்து, பொய்யான புகார்களின் அடிப்படையில் பொதுமக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யும் செயலில் ஈடுபட்டு வருவதாக பெரும் புகார்கள் எழுந்துள்ளன.
புரோக்கர் - போலீஸ் பிணைப்பு?
இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் பழி வாங்கும் அரசியல் நோக்கங்கள், மக்களிடையே உள்ள வேறுபாடுகளை தூண்டுவது போன்ற தீய அரசியல் பிணைப்பு இருக்கலாம் என்ற கருத்தும் சமூக ஆர்வலர்களிடையே பரவி வருகிறது.
துணைக் கண்காணிப்பாளர் மௌனம் ஏன்?
இதுபோன்ற சம்பவங்களை மையமாக கொண்டு, மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது, சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “எது நடந்தாலும் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?” என்ற கேள்வி தற்போது எழுகிறது.
“ஹேப்பி” பெயர் கொண்டவர் “புரோக்கர்களின் ஆதரவுடன் செயல்படுகிறார்”, “அரசியல்வாதிகளுக்கு நெருக்கமாக இருக்கிறார்”, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது காவல்துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருக்கிறது.
இந்தநிலை, அதிகாரப் பொறுப்பின்மை பற்றிய கேள்விகளையும் மக்கள் மனதில் சந்தேகத்தையும், எழுத்தியுள்ளது.
தலைவிரித்த சட்டவிரோத செயல்கள்
வேலூர் நகரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில்:
👀 போதைப்பொருள் விற்பனை
👀 மசாஜ் சென்டர்களில் ஓட்டல்களில் ஒழுக்கவழி செயல்கள்
👀 சூதாட்டம், மூணுசீட்டு, லாட்டரி
👀 கட்டப்பஞ்சாயத்துகள்
இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் பல இடங்களில் ஆணித்தரமாக நடைபெற்று வருவதும், அவை மீது எந்த வகையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் காவல்துறையின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.
குறிப்பாக இவை எல்லாம் தெற்கு காவல் நிலைய எல்லைகளில் அச்சுறுத்தலாக வளர்ந்து வருகின்றன என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆனால், சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களைத் தவிர்த்து, சக்திவீனமாக செயல்படுவது போலவே காவல் நிலையத்தின் பணிச் செயல் இருக்கிறது என மக்களின் எண்ணம்.
பொய் வழக்கு
அண்மையில், வேலூர் தெற்கு காவல் நிலையத்தில், ஒரு சாதாரண குடிமகன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. காவல்துறையினர் எதிராளிக்கு சாதகமாக செயல்பட்டு பொய் வழங்கு பதிந்துள்ளாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காவல்துறையிடம் சரியான விசாரணை நடத்தப்படவில்லை என்பதுடன், புகார் அளித்த நபர் தன்னுடைய நீதியை நிரூபிக்க நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அவர் கூறியபடி, போதுமான ஆவணங்களும் சாட்சிகளும் உள்ள நிலையில், காவல்துறை நடவடிக்கையை மறுத்துவிட்டது என்பது பணியிலுள்ள முறைகேடுகளை வெளிக்கொணர்கிறது.
இது போல தொடர்ச்சியான பொய்வழக்கு பதிவு செயல்கள் நீடித்தால், நம் நீதிமன்றமும், ஜனநாயகமும் கேள்விக்குறி ஆகும். மக்கள் சட்டத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கை முற்றிலும் சிதைந்துவிடும் அபாயம் நிலவுகிறது.
சமூக ஆர்வலர்களின் கோரிக்கை
இதற்கிடையே சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சட்டவியலாளர்கள்:
இந்நிலையில், இனியாவது:
✵ மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரிகள் முழுமையான கவனத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
✵ காவல் நிலையங்களில் நடைபெறும் நடவடிக்கைகள் மீதான உறுதியான கண்காணிப்பு தேவை
✵ மக்கள் புகார்களை தூய்மையாக, முறையாக விசாரிக்கபட வேண்டும்
“ஒரு குற்றவாளி தப்பித்தாலும் பரவாயில்லை, ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது” என்பது நம் ஜனநாயக சட்டத்தின் அடித்தளம். ஆனால், இன்றைய சூழலில் அது கண்ண்முன்னே உருகி காணப்படுகிறது.
முடிவில், அரசு மற்றும் காவல் துறை உயர் நிர்வாகம், மக்களின் நலனுக்காக, சட்டத்தின் உண்மையான செயல்பாட்டை உறுதி செய்ய, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூரில் காவல்துறையின் மீது நம்பிக்கை பாதிக்கப்படாதவாறு, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அரசும், காவல்துறை மேலாளர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது.
நாகரிக தோல்வி
“மக்கள் பாதுகாப்புக்காக இருக்க வேண்டிய காவல்துறை, சிலரால் பயம் கொள்ளும் இடமாக மாறுவது ஒரு நாகரிக தோல்வி” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இத்தகைய செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில், காவல்துறை மீதான நம்பிக்கையே சிதறும் அபாயம் இருப்பதாகவும், காவல்துறை அலுவலர்கள் பணியை சேவையாக பார்க்க வேண்டும் என்பதற்காக, இது போன்ற பொதுநல வழக்குகள், ஊடக ஒளிக்கிரைகள் மற்றும் நியாயமுள்ள வலுக்குரல்கள் தேவைப்படுகின்றன.
No comments
Thank you for your comments