Breaking News

வேலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைபடுத்தும் காலநீட்டிப்பு அறிவிப்பு

வேலூர் :

வேலூர் மாவட்டத்தில் 01.01.2011&ற்கு முன் கட்டப்பட்டு, அனுமதியின்றி இயங்கிவரும் கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, அரசு வெளியிட்டுள்ள வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளத்தின் மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01.07.2025 முதல் 30.06.2026 வரை ஓராண்டு காலம் காலநீட்டிப்பு செய்து, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அரசாணை எண். 92 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (ந.வ(3)) துறை நாள்.26.06.2025-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் (HACA) அமையும்பட்சத்தில் அரசு கடிதம் எண்.15535/ந.வ.4(3)/2019 நாள் 18.02.2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


Press Release No.480/2025 

Time limit to apply through online for obtaining concurrence for Educational Institutions buildings constructed and functioning in Vellore District prior to 01.01.2011 in non-plan areas is extended for another one year from 01.07.2025 to 30.06.2026 vide Government order No.92 Housing and Urban Development UD4(1) Department dated:26.06.2025 without any changes in the guidelines issued in the earlier Government order. If such constructed buildings exist in the non-plan area of notified hill villages of HACA, then the instructions in the Government letter No.15535/ UD4(3)/2019 dated:18.02.2020 are to be followed. It is hereby informed that those who are interested to apply under this scheme can register their application in the website at <https://www.tcponline.tn.gov.in> It is also requested to utilise this opportunity without fail.

District Collector, Vellore District.

 


No comments

Thank you for your comments