Breaking News

மகளிர் உரிமைத் தொகை பெற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மனுக்களை பெற்று விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்டத்தில் புதியதாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற 15.07.2025 அன்று முதல் நடைபெறவுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மனுக்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி. இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டம் வருகின்ற 15.07.2025 முதல் மாநிலம் முழுதும் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்தில் 15.07.2025 அன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கி 30.09.2025 வரை மொத்தம் 211 முகாம்கள் நடைபெற உள்ளது.

 வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகோடிமக்களுக்கும். அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகள்/திட்டங்களைஅவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின்கீழ் நகர்ப்புறப்பகுதிகளில் 71 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 140 முகாம்களும் ஆக மொத்தம் 211 முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களில் நகர்ப்புறபகுதிகளில் 13 அரசுத்துறைகளைச்சார்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச்சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். 

அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல்நலனைப்பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும் மற்றும் இம்முகாமில் ஆதார் சேவை மற்றும் இ-சேவை மையம் அமைக்கப்படவுள்ளது.

அதன்படி 15.07.2025 அன்று வேலூர் மாநகராட்சி, மண்டலம் 1, வார்டு 1 மற்றும் வார்டு 3 ல் உள்ள பொதுமக்களுக்கு காட்பாடி செங்குட்டை பெருமாள் கோயிலிலும், குடியாத்தம் நகராட்சி. வார்டு 13 மற்றும் வார்டு 14 ல் உள்ள பொதுமக்களுக்கு ஆர்.எஸ். சாலை பாபு மஹாலிலும், காட்பாடி ஊராட்சி ஒன்றியம். பொன்னை கிராமத்தில் உள்ளவர்களுக்கு பொன்னை சாமுண்டிஸ்வரிமஹாலிலும், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில், கொண்டசமுத்திரம் R.G.D கல்யாண மண்டபத்திலும், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில், அழிஞ்சிக்குப்பம், ராஜாக்கல் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அழிஞ்சிக்குப்பம் எம்.ஜி.மஹாலிலும், கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில். ஆலங்கனேரி, மேல்மாயில் ஆகிய கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மேல்மாயில் சித்ரா மஹாலிலும் முகாம்கள் நடைபெறவுள்ளது.

15.07.2025 அன்று நடைபெறவுள்ள 6 முகாம்களுக்கான பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி 07.07.2025 அன்று காலை முதல்  வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வரும் முகாம்களுக்கும் மனுக்கள் 7 நாட்களுக்கு முன்னரே விநியோகம் செய்யநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து முகாம்களுக்கு 1475 தன்னார்வலர்கள் மற்றும் 276  மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.   

வேலூர் மாவட்டத்தில் 15.07.2025 முதல் 14.08. 2025 வரை ஒரு மாத காலத்தில் மட்டும் மொத்தம் 114 முகாம்கள் நடைபெற உள்ளதால். பொதுமக்கள் அனைவரும் அவர்கள் பகுதியில் நடைபெற உள்ள உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க உள்ள மகளிருக்கு விண்ணப்பங்கள் முகாம் நடைபெறும் நாள் அன்று முகாமிலேயே தனியாக வழங்கப்படும். முகாம் நடைபெறும் இடத்தில் தேவைப்படும் பயனாளிகள விண்ணப்பங்களை பெற்று மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து பணம் பெறப்படவில்லை என்ற காரணம் உடையவர்கள் அல்லது குறுஞ்செய்தி மட்டும் வருகிறது வங்கிக் கணக்கில் பணம் பெறப்படவில்லை போன்ற இதர கோரிக்கைகள் தொடர்பாக தற்பொழுது முகாம் குறித்து வீடுகளில் வழங்கப்படும் விண்ணப்பங்கள் மூலமாக கோரிக்கையாக வழங்கலாம் என மாவட்டஆட்சித்தலைவர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

🔥Also Read : வேலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் – 15.07.2025 முதல் 14.08.2025 வரை முழு அட்டவணை வெளியீடு


No comments

Thank you for your comments