Breaking News

கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள வாகனம் (LMV Van) ஏலம் அறிவிப்பு

காஞ்சிபுரம்கால்நடை பராமரிப்புத்துறை,  உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள TN21G0177-(LMV Van) Model/1998 வாகனம்  16/02/2023 அன்று 11.00   மணிக்கு காஞ்சிபுரம்கால்நடை பராமரிப்புத்துறைகால்நடை பெரு மருத்துவமனை வளாகத்தில் வைத்து பொது ஏலம் விடப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி  அறிவித்துள்ளார்.

 


நிபந்தனைகள்:


ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன்பிணைத்தொகை ரூ.2000/- ரொக்கமாகவோ அல்லது வரைவோலையாக(DDMs Assistant Director of Animal Husbandry, Kanchipuram என்ற பெயரில் எடுத்து செலுத்த வேண்டும். 16/02/2023 அன்று 11.00  மணிக்கு  பின் வருபவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். 


ஏலத்தில் அதிக தொகை கோருபவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும் அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலம் கோரப்படின் ஏலம் இரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வேறு தேதிகளில் நடத்தப்படும். ஏலம் எடுத்தவர்  உடன் பணத்தை செலுத்திய பின் பொருளை எடுத்து செல்ல வேண்டும்.  


ஏலம் எடுத்தவர் தொகை செலுத்தாத பட்சத்தில் முன்பிணைத்தொகை மீள வழங்கப்படமாட்டாது. ஏலம் எடுத்தவர் நீங்கலாக மற்றவர்களின் முன்பிணைத்தொகை மீள வழங்கப்படும். 


இந்த ஏலத்தினை இரத்து செய்வதற்கோ,  ஏலத்தினை நிறுத்தி வைப்பதற்கோ அலுவலர்களுக்கு முழு அதிகாரம் உண்டு. ஏலம் எடுப்பவர் ஏலத் தொகையுடன் GST 18%(SGST 9%+CGST 9%)  சேர்த்து செலுத்தி வாகனத்தினை எடுத்துச் செல்ல வேண்டும். 


இவ்வலுவலகவளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேற்காணும் வாகனத்தினை அலுவலக வேலை நாட்களில் காலை11.00  மணி முதல் மாலை 5.00 மணி வரை பார்வையிடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்திஇ.ஆ.ப.அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

 

வெளியீடுசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர்காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments