காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் Kanchipuram DMK Emergency Executive Committee Meeting
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவள விழா மாளிகை மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்துகொண்டு திமுகவினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்கள் திமுக இளைஞரணி புதிய உறுப்பினர்களை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் சேர்க்க வேண்டும் எனவும் வருகின்ற தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் கழக ஆக்கப்பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை எடுத்துரைத்தார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர் வெளிக்காடு ஏழுமலை, பொருளாளர் கோகுலக்கண்ணண்ன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக மாணவரணி செயலாளர்- காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.டி.அரசு, காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம் மற்றும் தலைமை பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய-நகர-பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments