Breaking News

திருப்பெரும்புதூரில் தொலைந்த கைப்பையை பத்திரமாக ஒப்படைத்த போக்குவரத்து தலைமை காவலர் – பொதுமக்கள் பாராட்டு!

மேடவாக்கத்தை சேர்ந்த ரேகா (31) தனது உறவினரின் கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி முடித்து, கர்ப்பிணி பெண்ணை திருவள்ளூரில் உள்ள தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பொருட்டு ஆட்டோவில் பயணித்தார்.


பயணத்தின் போது, திருப்பெரும்புதூர் அருகே, ரேகா பணம், நகை மற்றும் செல்போன் ஆகியவை அடங்கிய தனது கைப்பையை தவறவிடுகிறார். இந்நிலையில் அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் குமரன், அந்த கைப்பையை கண்டெடுத்து பாதுகாப்பாக வைத்தார்.

பின்னர், அப்பகுதியில் சென்ற அனைத்து ஆட்டோக்களையும் விசாரிக்கும் போது, தனது கைப்பையை இழந்த ஏழை பெண்மணி ஒருவர் தவித்துக்கொண்டிருந்ததை அறிந்து, உடனே அவரை அழைத்து, சரிபார்த்த பின், கைப்பையை அவரிடம் ஒப்படைத்தார்.

பணம், நகை மற்றும் செல்போனை சரிபார்த்த ரேகா, உரிய முறையில் பெற்றுக் கொண்டு காவலர் குமரனுக்கு நன்றியை தெரிவித்தார்.

போக்குவரத்து தலைமை காவலரின் நேர்மையும், பொறுப்புணர்வும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

No comments

Thank you for your comments