Breaking News

பல்வேறு குற்றங்களுக்காக சிறைபிடிக்கப்பட்டு வாகனங்களை மீட்க மீண்டும் வாய்ப்பு

ஈரோடு, பிப்.7-

‘வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஈரோடு (கிழக்கு) அலுவலகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் / மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினரால்  பல்வேறு குற்றங்களுக்காக சிறைபிடிக்கப்பட்டு, வாகன உரிமையாளர்களால் திரும்ப பெறப்படாத நீண்டநாட்கள் விடுவிக்கப்படாமல் உள்ள வாகனங்களை விடுவித்துக் கொள்ள கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஈரோடு (கிழக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தொவித்துள்ளார்.  

வாகனங்களின் விபரங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஈரோடு (கிழக்கு) அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில்  7 தினங்களுக்குள் சம்பந்தப்பட்டவாகன உரிமையாளர்கள் அல்லது நிதியாளர்கள் ஈரோடு (கிழக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் வந்து வாகனத்திற்கான உரிய அபராதம் செலுத்தி விடுவித்துக் கொள்ளகேட்டுக் கொள்ளப்படுகிறது. 

தவறும் பட்சத்தில் மேற்படி வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும் என ஈரோடு (கிழக்கு), வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments