ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகையை ரயில்வே போலீஸ் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

நாகர்கோவில்:

நாகர்கோவில் ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகை ரயில்வே போலீஸ் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

நாகர்கோவில் மறவன்குடியிருப்பு வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் தாஸ், இவரது மனைவி மெட்டில்டா. இவர்களது ஜெமினா ஆகியோர் குடும்பத்தோடு சென்னையில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக  சென்றனர். 

திருமணம் முடிந்த பிறகு நேற்று  கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில்  கிளம்பி  இன்று காலை நாகர்கோவில் வந்தடைந்தது. ரயிலில் இருந்து மெட்டில்டா மற்றும் உறவினர்கள் இறங்கினார்.

இறங்கிய சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் நகை வைத்திருந்த பேக்கை காணவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த பகுதியில் தேடினர். அதற்குள் ரயில் கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றது. இதையடுத்து நாகர்கோவில் ரயில்வே போலீஸில் தகவல் தெரிவித்தனர். 

சப்-இன்ஸ்பெக்டர் பாபு விவரங்களை கேட்டறிந்தார்.பின்னர் ரயிலில் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மெட்டில்டா அமர்ந்திருந்த ரயில் பெட்டிக்கு சென்று இருக்கைகளை பரிசோதனை செய்தபோது அங்கு பேக்  ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதில் துணி மற்றும் செயின் மோதிரம் கம்மல் வளையல் உட்பட 50 பவுன் தங்க நகைகள் இருந்தது. இதையடுத்து மெற்றில்டாவுக்கு  தகவல் கொடுத்தனர். பின்னர் ரயில்வே நிலையம் வந்த அவர்களிடம் நகைக்கான அடையாளங்களை போலீஸார் கேட்டறிந்தனர்.

பின்னர் நகைகளை இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப் இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

No comments

Thank you for your comments