வழக்கறிஞர்கள் சங்கத்தில் தேசீய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் நீதியரசர் ஜி.ஆர் சுவாமிநாதன்
கன்னியாகுமரி :
குடியரசு தினத்தையொட்டி நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஜி.ஆர் சுவாமிநாதன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து மூத்த வழக்கறிஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தார்கள்.
நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தில் நடந்த 73 வது குடியரசு தின விழாவில் நீதியரசர் ஜி.ஆர் சுவாமிநாதன் தேசீய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி அருள் முருகன், சங்க தலைவர் மரிய ஸ்டீபன், செயலாளர் TK மகேஷ், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஜோசப்ஜாய், தலைமை குற்றவியல் நடுவர் மாயகிருஷ்ணன், சார்பு நீதிபதிகள் ராமலிங்கம், சொர்ண குமார்,, ஜெகதீசன், சட்டணிகள் ஆணைக்குழு செயலர் நம்பிராஜன், குற்றவியல் நடுவர் சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் வழக்கறிஞர்கள் சங்கத்தில் நடந்த குடியரசு தின விழாவில்சங்க தலைவர் அ.மரியஸ்டீபன், தலைமை தாங்கினார். செயலாளர் டி.கே.மகேஷ் வரவேற்புரையாற்றினார், மாவட்ட நீதிபதி, குடும்ப நீதிபதி, தலைமை குற்றவியல் நீதிபதி, முதன்மை சார்பு நீதிபதி, மூத்த வழக்கறிஞர் ரெத்ன சுவாமி, பால ஜனாதிபதி, ஆர்.மகேஷ், அசோக் பத்மராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் 50-ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர் தொழில் செய்யும் மூத்த வழக்கறிஞர்கள் ஆனந்தம் பிள்ளை, ராமசந்திரன், ஸ்தாணுசுப்ரமணி, பாலகிருஷ்ணன், சங்கரசுப்ரமணி, ராமசுவாமி, தங்க சுவாமி, சிவராஜ பாண்டியன், ரெத்ன சுவாமி, அருணாசலம், ஹசன் மொகைதீன் அப்துல் கலாம், ராஜகுஞ்சரம் ஆகியோர் இருக்கைக்கு வந்து மாண்புமிகு நீதியரசர் தங்கள் பொற்கரங்களால் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார்கள்.
அதன் பின்னர் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் விபர குறிப்பேடு 2022 வெளியிட்டு வழக்கறிஞர்கள் மத்தியில் உரையாற்றினார்.
முதல் பிரதிதியினை மூத்த வழக்கறிஞர் பால ஜனாதிபதி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் விஸ்வராஜன், இணை செயலாளர் பெருமாள், விஜி பிரேம் சோபியா, மற்றும் உறுப்பினர்கள் மூத்த வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், சங்க துணை தலைவர் பிரதாப் நன்றியுரையாற்றினார். விழாவில் ஏராளமான நீதிபதிகளும் மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments