Breaking News

அக்னிபாத் திட்டத்தில் ராணுவ வீரர்கள் தேர்வு... 21.08.2022 முதல் 25.11.2022

வேலூர்: 

இந்திய ராணுவத்தில் சேருவதற்கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்கி நவம்பர் 25ம் தேதி வரை நடக்கிறது. தகுதி வாய்ந்தவர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமார வேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

அக்னிபாத் திட்டத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வேலூர், திருப்பூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் 21.08.2022 முதல் 25.11.2022 வரை நடைபெற உள்ளது. 

தகுதி வாய்ந்தவர்கள் www.joinindianarmy.nic.in  என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம். 

அதன்படி நாகர்கோவில் அறிஞர் அண்ணா ஸ்டேடியத்தில்வரும் 21ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரையும், 

கோவை அவினாசி டி.இ.ஏ பொதுப் பள்ளி வளாகத்தில் செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரையும், 

வேலூர் கோட்டை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் சென்னை தலைமையிடத்து ஆர்ஓ ஏற்பாட்டின் பேரில் நவம்பர் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 இணைதளத்திற்கு செல்ல கிளிக் செய்யவும் 👉 https://164.100.158.23/index.htm

No comments

Thank you for your comments