Breaking News

அரசு ஊழியரை தாக்கியதாக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மீது வழக்கு

கன்னியாகுமரி:

தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில் பொதுப்பணித்துறை ஊழியரை தாக்கியதாக தளவாய்சுந்தரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி தொகுதி அதிமுக எம்எல்ஏ. தளவாய் சுந்தரம். முன்னாள் அமைச்சரான இவர் அதிமுக ராஜ்யசபா எம்பி, முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்தார். 

இவர் மீது தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியரான நடேஷ் (33) என்பவர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

அதில், கடந்த 16ம் தேதி பணியில் இருந்தபோது தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில் பணியில் இருந்தபோது, 7 பேர்களுடன் வந்த தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முகநூலில் அவதூறு பரப்பியதாக கூறி தாக்கினர். 

இதைப்போல் தனது மனைவியும் தாக்கப்பட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரின்பேரில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உட்பட 8 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 294 (பி), 323, 506 (ஐ), 379 என்.பி) போன்ற 5 பிரிவுகளில் ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் மீது வழக்குப்பதிவு செய்திருக்கும் சம்பவம் குமரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments