கோவா மாநில சட்டசபை தேர்தல்: பார்வையாளராக ப.சிதம்பரத்தை நியமனம்
கோவா :
கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பார்வையாளராக ப.சிதம்பரத்தை அக்கட்சி நியமித்துள்ளது.
ப. சிதம்பரம் தேர்தலில் வெற்றிக்கான யுக்திகளை வகுத்துக் கொடுப்பார் என்றும், மாநில தேர்தலுக்கான ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 பேர் கொண்ட கோவா சட்டசபைக்கு கடந்த 2017-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் தனிக்கட்சியாக அதிக இடங்களை கைப்பற்றியது. ஆனால் பா.ஜனதா மற்ற கட்சிகள் துணையுடன் ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Post Comment
No comments
Thank you for your comments