அமலாக்க துறை வைத்து மிரட்டுகின்றனர் -மிசாவை பார்த்த முதல்வர்... இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டோம் - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
![]() |
![]() |
காஞ்சிபுரம்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் காஞ்சி தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உத்திரமேரூர் ஒன்றியத்திற்க்குட்பட்டபெருநகர் கிராமத்தில் உள்ள அகஸ்த்தியப்பா நகர் பகுதியில் நடைபெற்றது.
காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் முன்னிலையிலும் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு ஏழை எளிய மக்களின் நலனுக்காக செய்த திட்டங்கள்,சாதனைகள்,நிதி நிலை அறிக்கை, இந்தித் திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுவரை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் பேசிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்,
ஒன்றிய அரசு 100 ரூபாய் வசூல் செய்து திருப்பி 29 ரூபாய் தருகின்றனர்.இதே,
பீகாரில் 1ரூபாய்க்கு 7 ரூபாயும்,
உத்திரப்பிரதேசத்தில் 1 ரூபாய்க்கு 2.76 ரூபாயும் , அசாமில் 2.63 ரூபாயும்,பிஜேபி ஆளூம் மத்திய பிரதேசத்தில் 1 ரூபாய்க்கு 2.42 ரூபாய் திருப்பி தருகின்றனர்.
வடமாநிலங்களில் 1 ரூபாய்க்கு 2,3,7 ரூபாய் திருப்பி தருகின்றனர்,ஆனால் தமிழ்நாட்டில் 1 ரூபாய்க்கு 29 பைசா தான் திருப்பி தரப்படுகிறது.
ஒரு கண்ணில் வெண்ணெய்,ஒரு கண்ணில் சுண்ணாம்பு தருகின்றனர்.இதுக் குறித்து கேள்வி கேட்டால் ED அமலாக்கத்துறை என்ற பெயரில் மிரட்டி பார்க்கின்றனர்.
இதற்கெல்லாம் பயந்தவர்கள் தமிழர்கள் இல்லை,மிசாவையே பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்.
மற்றொருபுறம் தொகுதி மறுசீரமைப்பு , நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் மக்களின் ஆதரவால் திமுக அமோக வெற்றி பெற்றது, தற்போது மறுசீரமைப்பு ஏற்பட்டால் 39 தொகுதி 31 ஆக மாறிவிடும்.
ஜனத்தொகை அடிப்படையில் தொகுதிகளை குறைகின்றோம் என கூறுகின்றனர்,அன்றைய பிரதமர் இந்திரா காந்தி மக்கள் தொகையை குறைக்க வேண்டும் இல்லையென்றால் ஏழை எளிய மக்கள் உணவு பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து,அன்றைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற வாசகத்தை முன்னிறுத்தி மக்கள் தொகை கட்டுப்படுத்தினர், பின்னர்,நாம் இருவர் நமக்கு ஒருவர் என கொண்டு வந்தனர்.
இந்திரா காந்தி 25 ஆண்டு காலத்திற்கு இதே தொகுதி நிலை நீடிக்கும் என கூறினார், பின்னர்,வாஜ்பாய்யும் அதே கூறினார்,இதையே முதலமைச்சர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, வாஜ்பாய் நிறைவேற்றியது போல் இன்னும் 25 ஆண்டு காலம் தொகுதி மறுசீரமைப்பை தள்ளிப்போட வேண்டும் என கேட்டார்.ஆனால் இதற்கு பிரதமர் வாயை திறப்பதே இல்லை..
தேசிய கல்வி கொள்கை வந்தால் 5,8,10 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு வைத்து மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.இதற்காகத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்தினால் போதும் என்று...
தற்போது, மூன்றாவதாக ஒரு மொழி படி என்று தினிக்கின்றனர்.
ஆங்கிலத்தில் படித்தது தால்தான் மாணவர்கள் ஜெர்மனி, ஜப்பான்,அமெரிக்காவில் டாலர் கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.
அண்ணா சொன்னார்,தாய் மொழியான தமிழை நாம் படிக்க வேண்டும், இணைப்பு மொழியாக ஆங்கிலம் படித்தால் போதும், அதுதான் இருமொழிக் கொள்கையாக அண்ணா கொண்டு வந்ததைத் தான் தமிழ்நாடு முதலமைச்சர் கடைப்பிடிக்கிறார்.
வடமாநிலங்களில் அனைவரும் இந்தி பயில்கின்றனர், ஆனால், சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மன் போன்ற நாடுகளில் இந்தியன் என்று சொல்லிக்கொண்டு ஆங்கிலம் பேசுகிறான் என்றால் அவன் தமிழ்நாட்டுக்காரனாக தான் இருப்பான்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக இருப்பதற்கு இருமொழி கொள்கை தான் காரணம்.
இருமொழி கொள்கை படித்ததுனால் தான் நாகரிகம் வளர்ந்து இருக்கிறது,கை நிறைய சம்பாரிக்கின்றனர், குடும்ப பொருளாதார உயர்ந்து இருக்கிறது.
கோவிலில் பட்டாசியார்கள் திவ்ய பிரபந்தம் தமிழில் தான் பாடப்படுகிறது, தேவாரம் திருவாசகம் என அனைத்தும் தமிழில் தான் பாடப்படுகிறது, இதையெல்லாம் ஹிந்தியில் பாடப்படவில்லை என அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு தையல் இயந்திரம்,இஸ்திரி பெட்டி,வேட்டி, சேலை, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்,பேரூர் செயலாளர் பாரி வள்ளல், பேரூராட்சி மன்றத் தலைவர் சசிகுமார், ஒன்றிய கவுன்சிலர் ருத்ரக்கோட்டி, ஊராட்சி மன்ற தலைவர் மங்கள கௌரி வடிவேலு,
ஒன்றிய திமுக நிர்வாகிகள், ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 4000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments