அரசு பள்ளி மைல்தளம் சிமெண்ட் பூச்சுகள் பெயா்ந்து விழுந்தது - அச்சத்தில் மாணவா்கள்.
காஞ்சிபுரம், ஜூலை 5 -
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட குருவிமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி புதிய கட்டிடத்தின் மேல்தள சிமெண்ட் பூச்சுகள் பெயா்ந்து விழுந்தது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்துள்ள குருவிமலை ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது இதில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது அதனால் அதே பள்ளி வளாகத்தில் சுமார் 61 லட்சம் மதிப்பீட்டில் மூன்று வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து மாணவ மாணவியர் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் (ஜூலை.05) வெள்ளியன்று காலை ஒன்பது மணிக்கு வழக்கம் போல் காலை வணக்கம் நிகழ்வில் மாணவர்களும், ஆசிரியர்களும் ஈடுபட்டுவந்தனர். அதே நேரத்தில் புதிய கட்டிடத்தில் உள்ள ஒரு வகுப்பறை மேல்தள சிமெண்ட் பூச்சி பெயர்ந்து விழுந்ததில் மின்விசிறி உள்பட பல்வேறு பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. துரதிஷ்டவசமாக பள்ளி மாணவ-மாணவியருக்கு காலை வணக்கம் வழிபாட்டில் இருந்ததால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் உயிர் தப்பியுள்ளனர். மேற்கூரை சேதம் அடைந்த வகுப்பறை கட்டடத்தின் அருகே மாணவா்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனா்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பெயரில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளா நேரில் வந்து பள்ளி பார்வையிட்டார்.
அப்போது அவரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் வட்டச் செயலாளர் எஸ்.பழனி புகார் மனுவை ஒன்றை அளித்தார். அந்த மனுவை பெற்றுக் கொணட அவர் சம்பந்தப்பட்டவர்களை துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி கூறியுள்ளார் .
அந்த மனுவில் மாணவா்களின் நலன் கருதி பெரும் அசாம்பாவிதம் ஏற்படும்முன் குருவிமலை அரசுப் பள்ளியில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சேதமடைந்த பள்ளி வளகத்தில் உள்ள கட்டடத்தை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் பள்ளி கட்டிட ஒப்பந்ததாரர்களான எடேமேச்சேரி வெங்கடேசன் மற்றும் ஊராட்சி ஒன்றிய இன்ஜினியர் சுப்புராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒப்பந்த மதிப்பீடு தொகையை முழுமையாக அரசு கருவூலத்திற்கு திரும்ப பெறுவதோடு, பள்ளி கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வுக்கு உட்படுத்தி தரத்தின் உறுதியை, உறுதி செய்த பின்னர் மாணவர்களை வகுப்பறையில் அனுமதிக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
Post Comment
No comments
Thank you for your comments