Breaking News

மகளிர் நேய ஊராட்சி மற்றும் பாலின சமத்துவ நிர்வாகத்திற்கான களப்பணி கற்றல் பயிற்சி முகாம் – தேவரியம்பாக்கம் ஊராட்சியில் முன்னோடி நிகழ்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சியில் இன்று மகளிர் நேய ஊராட்சி மற்றும் பாலின சமத்துவ நிர்வாகத்திற்கான களப்பணி கற்றல் பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாம், மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி மையம் (SIRD – மறைமலைநகர்) ஏற்பாட்டில், “மகளிர் நேய ஊராட்சி மற்றும் பாலின சமத்துவ நிர்வாகத்திற்கான பயிற்சி முகாம்” (Training of Trainers – ToT on Gender Sensitive Governance) என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 33 பயிற்சியாளர்கள் இந்த முகாமில் பங்கேற்று, தேவரியம்பாக்கம் ஊராட்சியின் மகளிர் முன்னேற்ற நடவடிக்கைகள், சமூக நலத்திட்டங்கள் மற்றும் பாலின சமத்துவ நிர்வாக நடைமுறை குறித்து நேரில் களப் பயிற்சி பெற்றனர்.

சுயஉதவிக் குழுக்களின் பங்கு 

பயிற்சியாளர்கள் முன்னிலையில், தேவரியம்பாக்கம் ஊராட்சியின் சுயஉதவிக் குழு (SHG) உறுப்பினர்கள், பெண்கள் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களை விளக்கினர்.

பெண்கள் இயக்கும் குழுக்கள்

தொழில் தொடக்கம் மற்றும் வங்கிக் கடன்கள்

கல்வி, உடல்நலம் மற்றும் சமூக பங்கேற்பு ஆகிய துறைகளில் பெண்களின் செயல்பாடுகள், பயிற்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

ஊராட்சித் தலைவர் திரு. அஜய்குமாரின் வழிகாட்டுதல்

இந்த மாற்றத்திற்கு முதன்மை காரணமாக இருந்தது, ஊராட்சித் தலைவர் திரு. மா.த. அஜய்குமாரின் நெறியியல் நிர்வாகம் மற்றும் பெண்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் செயல்முறை.

அவரது:

திட்டமிட்ட முன்னேற்பாடுகள்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கான அக்கறை

சிறந்த நிர்வாகக் கொள்கைகள், எவரும், எப்பகுதியும் விடுபடாத வகையில் வருடாந்திர கிராம வளர்ச்சி திட்டம் ஆகியவை பயிற்சியாளர்களிடையே பாராட்டைப் பெற்றன.

பயிற்சியாளர்கள் கருத்து

 “இங்கே காணப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் நம்பிக்கையை ஊட்டுகின்றன. பெண்களின் பங்கு சமூக மாற்றத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இங்கு நன்கு உணர்ந்தோம். எங்கள் ஊர்களிலும் இதுபோன்று நடைமுறைகளை கொண்டு வருவோம் என்ற உறுதியுடன் திரும்புகிறோம்.” எனவும்,

களப் பயிற்சியில் கலந்து கொண்ட பயிற்சியாளர்கள், தேவரியம்பாக்கம் ஊராட்சியை “முன்னோடி மாதிரி ஊராட்சி” எனவும் பாராட்டினர்.

இந்த நிகழ்வு, பாலின சமத்துவம் மற்றும் மகளிர் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் பாராட்டினர்.

மாநில ஊரக வளச்சி பயிற்சி மையத்தில் இருந்து இந்த களப்பயிற்சிக்கு உதவி இயக்குநர், திருமுருக பூங்குழலி, ஒருங்கிணைப்பாளர் சேகர், பயிற்சியாளர் கோகுல் மற்றும் அரவிந்து ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த நிகழ்வில் தேவரியம்பாக்கம் ஊராட்சித் தலைவர் அஜய்குமார், துணைத் தலைவர் கோவிந்தராஜன், வார்டு உறுப்பினர் சாந்தி, ஊராட்சி செயலர் மற்றும் மகளிர் குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments