தமிழகத் தமிழறிஞர் பேரவை, எழுத்தாணி தமிழ்க் கலை இலக்கியச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
காஞ்சிபுரம்
தமிழகத் தமிழறிஞர் பேரவை, எழுத்தாணி தமிழ்க் கலை இலக்கியச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
தமிழகத் தமிழறிஞர் பேரவை,எழுத்தாணி தமிழ்க் கலை இலக்கியச் சங்கம் சார்பில் கல்வி தொண்டு ஆற்றிவரும் பேராசிரியர் டாக்டர்.சிவ.செல்வகுமாருக்கு பாராட்டு விழா, தமிழ் அமைப்புகளுக்கு விருது வழங்கும் திருவிழா, கவிஞர்களுக்கு சிறப்பு செய்யும் பெருவிழா என முப்பெரும் விழாவானது காஞ்சிபுரம் ரயில்வே சாலையிலுள்ள பூமாலை வணிக வளாகத்தில் எழுத்தாணி தமிழ்க் கலை இலக்கியச் சங்கம் பொதுச்செயலாளர் கவிஞர் எழுத்தாணி ச.அரிராசு தலைமையில் நடைபெற்றது.
தலைவர் கவிஞர் குன்றை குப்புசாமி வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றி, அறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றம், விசார் தமிழ்ச் சங்கம்,விழுதுகள் கலை இலக்கிய மன்றம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு விருதுகளும், 25க்கும் மேற்பட்ட கவிஞர்களுக்கு பதக்கமும்,சான்றிதழும் வழங்கி கெளரவித்தார்.
மேலும் மேலும் தமிழகத் தமிழறிஞர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் டாக்டர் சிவ.செல்வகுமார் சார்பில், கல்லூரி மேல் படிப்பிற்காக தந்தையை இழந்த மாணவி ஒருவருக்கு ரூ.10ஆயிரம் கல்வி ஊக்க நிதியினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
குறிப்பாக இவ்விழாவில் தொடர்ந்து சிறப்பாக மக்கள் சேவையாற்றி வரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருக்கு "பேரறிஞர் அண்ணா" விருதினை,விழா குழுவினர் வழங்கி அவரை வெகுவாக கெளரவித்து பாராட்டினர்.
இறுதியாக எழுத்தாணி தமிழ்க் கலை இலக்கியச் சங்கம் துணைச்செயலாளர் கவிஞர் கோ.செல்வராசு நன்றியுரை ஆற்றினார்.
No comments
Thank you for your comments