Breaking News

வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகம் ஸ்டார் 2.0 திட்டத்தில் முன்னேற்றம் – ஸ்டார் 3.0 திட்டத்தை விரைவில் அமல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்டு 15 வார்டுகள் உள்ளன. இப்பேரூராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் வாலாஜாபாத்தில் பேரூராட்சி அலுவலகம், தாலுக்கா அலுலகம், ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம், வங்கிகள், இரயில் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம் (ம) கருவூலக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.


வாலாஜாபாத்தைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமவாசிகள் வாலாஜாபாத் வந்துதான் பல்வேறு புறநகர்ப்பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். இந்நிலையில் எப்பொழுதுமே பரபரப்பாகவே காணப்படும் சார்பதிவாளர் அலுவலகத்தின் பதிவு வரம்புக்குட்பட்டு 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 

இங்குள்ள விளை நிலங்கள், வீட்டு மனைகள் வாங்குவதற்கும் விற்பதற்கும் நாள்தோறும் நூற்றுக் கணக்கானோர் பதிவு அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். விளை நிலங்களை வாங்குவதற்கு முன்பு வில்லங்கச்சான்று மற்றும் ஆவணங்களின் முன் ஆவண நகல்கள் பெறுவது வழக்கம் இது போன்ற நகல்கள் பெறுவது என்றால் கடந்த காலங்களில் மாதக்கணக்கில் நாட்கள் கழியும் தற்போது தமிழக அரசின் ஸ்டார் 2.0 திட்டத்தின் மூலம் இணையவழி கட்டணத்துடன் வில்லங்கச்சான்று, ஆவண நகல், திருமணப் பதிவு, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றுகள், ஆவணப்பதிவுடன் கூடிய பட்டா மாற்றம் என அனைத்து இணையவழி சேவைகளும் உடனுக்குடன் வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் அன்றன்றே முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். 

வாலாஜாபாத் ஆவண எழுத்தர்கள் கூறுகையில் தற்போது ஸ்டார் 2.0 திட்டத்தின் மூலம் மக்களுக்கு இணையவழி சேவைகள் மற்றும் ஆவணப்பதிவுகள் பதிவுத்துறை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது எனத் தெரிவித்தனர். 

எதிர்வரும் காலங்களில் ஆவணப்பதிவினை எளிமைப்படுத்தும் விதமாகவும், மோசடிகளை தவிர்க்கவும் ஸ்டார் 3.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வீட்டு மனைகள் வாங்கும் மக்கள் அம்மனைப்பிரிவு குறித்த DTCP அங்கீகாரம் மற்றும் அனுமதியற்ற மனைப்பிரிவிற்குண்டான ஒப்புதல், மனையின் உரிமையாளர் குறித்த அசல் ஆவண விவரங்கள்

சரிபார்த்து வாங்குமாறு தெரிவித்துக் கொண்டனர். ஏனெனில் பல்வேறு போலியான அனுமதியற்ற மனைப்பிரிவிற்கான ஒப்புதல் ஆணை, ஆள்மாறாட்டம் மற்றும் போலி இறப்புச் சான்றுகள், போலி வாரிசுரிமைச் சான்றுகள் போன்றவை மோசடி நபர்களால் ஆவணப்பதிவிற்கு கொண்டு வரப்பட்டதை சார்பதிவாளர் அலுவலகத்தில் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இது போன்ற போலி ஆவண மோசடிகளை களையும்வண்ணம் ஸ்டார் 3.0 திட்டம் விரைவில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர் என கூறினர்.

No comments

Thank you for your comments