உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சாஸ்டாங் நமஸ்காரம் மூலம் யாத்திரை செல்லும் பக்தர்கள்

உலக நன்மை வேண்டி உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சாஸ்டாங் நமஸ்காரம் மூலம் யாத்திரை செல்லும் பக்தர்கள் இன்று காஞ்சிபுரத்தை கடந்தனர்.


உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரி பகுதியை சேர்ந்த போதிலால் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர் உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து கடந்த 13 மாதங்களுக்கு முன்பு அனைத்து உலக மக்களும் நோயின்றி வாழ இறைவனை வேண்டி சாஸ்டாங்க் நமஸ்காரம் எனும் நிகழ்வினை துவக்கினர்.

தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைக் கடந்து இன்று காலை கோயில் நகரம்  என அழைக்கப்படும் காஞ்சிபுரம் நகரினை  அடைந்தனர்.

காலை 7 மணிக்கு போதிலால் தலைமையில்  மூன்று பேர் சாஸ்டாங் நமஸ்காரத்தை சாலையின் ஓரம் வழியாக செய்து கொண்டே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கடந்து சென்றனர்.

திடீரென இது போன்ற நிகழ்வை கண்ட காஞ்சிபுரம் நகர மக்கள் ஒரு கணம் அதிசயத்தும் , அதன் பின் இதனை கேட்டு அறிந்து அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்த யாத்திரை குறித்து தெரிவித்த குழுவின் தலைவர் போதிலால் , உலக மக்கள் அனைவரும் அமைதியும் நலமுடன் வாழ இந்த யாத்திரையை துவக்கி உள்ளதாகவும் , உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை இது போன்று செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் , வழிநெடுகிலும் பக்தர்கள் தங்களுக்கு உற்சாகம் அளித்து உணவுகளையும் பரிமாறுகின்றதாகவும் இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

கடன் செயலி (LOAN APP) மோசடி 

நாள்தோறும் 8 முதல் 10 கிலோமீட்டர் தூரம் இதுபோன்று சாஸ்டாங் நமஸ்காரம் மூலம் செல்வதாகவும் ராமேஸ்வரத்தில் இதனை விரைவில் நிறைவு செய்ய உள்ளதாகும் தெரிவித்தனர்.

இவர்களின் இந்த யாத்திரை நிகழ்வு பல பகுதிகளில் கடந்தபோது பல்வேறு இடங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments