ஸ்ரீ தும்பவனத்தம்மன் ஆடி மாத திருவீதி உலா விழா
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகலுத்து தெரு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சிவகாமி சமேத நடராஜர் திருக்கோவிலில் உள்ள அமைந்துள்ள ஸ்ரீதும்பவனத்தம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டு இன்று ஸ்ரீதும்பவனத்தம்மன் 32 கைகளுடம் மகிஷாசுரவர்த்தினி வேடத்தில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமான மேடையில் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஸ்ரீதும்பவனத்தம்மன் ஆடி மாத திருவீதி உலா தாரை தப்பட்டை, பேண்ட் வாத்தியங்கள், பம்பை ஒலி ஒழிக்க கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் கோட்ராம்பாளையம் தெரு, ரங்கசாமி குளம், நாகலத்து மேடு, நாகலத்து தெரு, மந்தவெளி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வீதி வீதியாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீடுகள் தோறும் வீடு வீடாக பக்தர்கள் வெளியே வந்து தீபாராதனை செய்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
No comments
Thank you for your comments