காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார் ஆட்சியர் ஆர்த்தி

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி பூஸ்டர் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் நாளுக்கு நாள் உருமாறிய கொரோனா ஒமைக்ரானாவாக மாறி உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. தமிழகத்திலும் அதனுடைய தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி தொடங்கிவைத்தார். 

அதனடிப்படையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்  மா. ஆர்த்தி அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாமினை தொடங்கி வைத்தார். 

இரவு 10 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை ஊரடங்கு தடை சட்டம் நேற்று முன்தினம் முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்  தொடர்ச்சியாக மக்கள் அதிகம் கூடும் தினமான ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு தடை சட்டம்  அமுல் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து  ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தடை சட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் முக்கிய சாலைகளான  காந்திரோடு, மூங்கில் மண்டபம், காமராஜர் வீதி, நான்கு ராஜ வீதிகள் போன்ற பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவிக்கும் விதிகளை கடைபிடித்து சமூக இடைவெளி பின்பற்றி முககவசம் அணியவேண்டும்  நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் D.ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments