Breaking News

நோயுற்று நகரமுடியாமல் இருந்த பசுமாட்டை மீட்டு மருத்துவ உதவி செய்த பாஜகவினர்...

சாந்திநகரில் கடந்த இரண்டு நாட்களாக நோயுற்று அவதியுறும் பசுமாட்டினனையும் அதன் கன்றுகளையும் காப்பாற்றிய மாநில தேசிய கட்சி உறுப்பினர்கள்.. 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சாந்திநகரில் 30 வது தெருவில் ஒரு பசுமாடு நோயுற்று நகரமுடியாமல் கடந்த இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் கிடப்பதாகவும் அதன் இரண்டு கன்றுகள் அதன் பக்கத்திலேயே பரிதாபமான வகையில் செய்வதறியாமல் நிற்பதாகவும் விலங்கு நல ஆர்வலர் முத்துக்குமாருக்கு தகவல் கிடைத்தது. 

அதனடிப்படையில் அவர் விலங்கு நல ஆர்வலர்களிடம் தகவல் தெரிவித்தார். விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்ததின் படி ..பசுவிற்கு உதவிட வேண்டி அரசு நடமாடும் விலங்கு நல மருத்துவ வாகனத்தின் உதவி எண்ணிற்கு 1962 விற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

வழக்கம் போல் அவர்களிடமிருந்து உதாசீனமாகவே பதில் கிடைத்தது. பிறகு இந்த தகவல் கேள்விப்பட்டு பசு இருக்கும் இடத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சி சமூக ஊடக பிரிவு மாநில  செயலாளர் ராமானுஜம் மற்றும் மனக்காவலம்பிள்ளை நகர் திமுக உறுப்பினர் மணி ராசய்யா இருவரும் பசுவின் பரிதாபமான நிலையினை கருத்தில் கொண்டு 1962க்கு மீண்டும் தொடர்பு கொண்டனர்.

அவர்களிடம் இருந்து மீண்டும் உதாசீனமான தகவல் வரவே .. மாவட்ட கால்நடை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு சூழ்நிலையினை விளக்கினார்கள்.. அதிகாரிகளும் உடனே அருகில் உள்ள கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு உதவ கோரினார்கள்..

சிறிது நேரத்தில் கால்நடை மருத்துவர் பசுவின் இடத்திற்கு வந்து மருத்துவ உதவி செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ளவர்கள் பசுவிற்கு உணவு மற்றும் தண்ணீர் வைத்து பார்த்துக்கொள்வதாக உறுதியளித்த பின் அங்கிருந்து நகர்ந்தார்கள்.. 



மேலும் ராமானுஜம் பசு மற்றும் கன்று பற்றி தகவலை வாட்ஸ் அப் மற்றும் அந்த பகுதியில் உள்ள மாடு வளர்ப்பவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் தெரிவித்ததின் விளைவாக மாட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாடு உரிமையாளரிடம் பாதுகாப்பாக சேர்ந்தது. 

இரண்டு நாட்களாக கேட்பாரற்று உயிருக்கு ஆபத்தான வகையினில் கிடந்த பசுவிற்கு அருகில் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் திமுக, பிஜேபி கட்சியின் உறுப்பினர்களால் மருத்துவ உதவி கிடைத்தது. சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளரிடம் சேர்த்தும் வைக்கப்பட்டதை அருகில் உள்ளவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.. 

விலங்கு நல ஆர்வலர் முத்துக்குமார் கூறுகையில்.. 

திருநெல்வேலி மாவட்டத்தில் விலங்குகள் நலனிகாக கோரப்படும் மருத்துவ உதவிகளுக்கு சம்பந்தப்பட்ட கால்நடைத்துறையும் சரி , மருத்துவர்களும் பெரிதாக சேவை மனப்பான்மையுடன் செவி சாய்ப்பதில்லை, மிகுந்த சிரமத்திற்கிடையே தான் இவைகளுக்கு விலங்கு நல ஆர்வலர்கள் உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள்.. ‘

மாடுகள் போன்ற பெரிய விலங்குகள் மருத்துவமனை கொண்டு செல்வதில் பெரிய சிரமம் உள்ளது. அந்த மாதிரி சூழ்நிலையினில் அரசு நடமாடும் விலங்கு நல மருத்துவ வாகனத்தின் உதவி 1962 என்ற எண்ணுக்கு அழைக்கையில் அவர்கள் பெரும்பாலும் விலங்கு உரிமையாளருக்கு மட்டும் தான் மருத்துவ உதவி செய்யப்படும் என்று அலட்சியமாக கூறுகிறார்கள்.. 

ஆனால் ஆதரவற்று காணப்படும் விலங்குகளுக்கு உரிமையாளர் இருப்பினும் அவர்களுக்கு தகவல் தெரிந்தால் தானே அவர்கள் விலங்கினங்களை மீட்க முடியும் .. அப்படிப்பட்ட சூழ்நிலையினில் அருகில் இருக்கும் விலங்கு நல ஆர்வலர்கள் தான் அதற்கு உதவிட முடியும்.. 

அந்த சூழ்நிலையினில் அரசும் இந்த மாதிரி சமூக ஆர்வலர்களை கொண்டு தங்களது சேவையினை தொடர்ச்சியாக செய்யலாம் . அதற்க்கு மாறாக ஆர்வமுடன் செயல்படும் சமூக ஆர்வலர்களை உதாசீனப்படுத்தும் வகையினில் கால்நடைத்துறை செயல்படுவது வேதனை அளிக்கிறது என்று கூறினார். 

மேலும் சாலைகளை சுற்றி திரியும் ஆதரவற்ற நாய்களின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருப்பதாகவும் கூறினார். இந்த நிலை கொஞ்சமாக மாற வேண்டும் .. அதற்க்கு தற்போது மாநில மற்றும் தேசிய கட்சிகளை சேர்ந்த மணி ராசய்யா வும் , ராமானுஜம் போன்ற நல்ல அரசியல்வாதிகள் உருவாக வேண்டும் என்று கூறினார். 

பாரதிய ஜனதா கட்சியின் மாநில சமூக ஊடக பிரிவு செயலாளர் ராமானுஜம் கூறுகையில் ..இந்த மாதிரி பசுக்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ச்சியாக வாகனங்களில் அடிபட்டு காயங்களில்நாள் அவதியுறுவதாக தகவல் கிடைத்து வருகிறது.. மதிர்ப்பிற்குரிய நமது பிரதமர் பசுக்களை பாதுகாத்திட வேண்டும் என்று பல வகையினில் கூறிவருகிறார். 

அதனை கருத்தில் கொண்டு பசு மற்றும் விலகுகளுக்கான மருத்துவ உதவிகள் கிடைத்திடவும் , அலட்சியப்போக்குடன் செயல்படும் கால்நடைத்துறையின் செயல்பாடுகளை மாநில மற்றும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விலங்குகளுக்கா உரிமைகளையும் அவற்றின் வாழ்வாதத்திற்கான வாக்குறுதிகளையும் பெற்று தர வருங்காலங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக முன்னேற்பாடுகளாக மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் மாநில கால்நடை இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு கட்சி சார்பாகவும் பல முன்னேற்பாடுகளை செய்வோம் என்று கூறினார்.

No comments

Thank you for your comments