அருள்மிகு முக்தீஸ்வரர் ஆலயத்தில் விளக்கு பூஜை... 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம், டிச.25-
காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு முக்தீஸ்வரர் ஆலயத்தில் உலக மக்கள் நன்மை கருதி நடைபெற்ற விளக்கு பூஜையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு முக்தீஸ்வரர் ஆலயத்தில் உலக மக்கள் நன்மை கருதியும் உலகையே அச்சுறுத்தும் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக சிறப்பு பூஜைகளுடன், விளக்கு பூஜைகள் நடைபெற்றது.
இந்த பூஜையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து தூப தீப ஆராதனைகள் செய்து நெய்வேத்ங்களுடன் சிறப்பு தீபாராதனை செய்து வழிபாடு செய்தனர்.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் ரவிக்கை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இந்த விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களும் சமூகஇடை வெளிகளுடன் முக கவசத்துடன் பூஜைகள் செய்து வழிபட்டது குறிப்பிடத்தக்கது.
Post Comment
No comments
Thank you for your comments