வாலாஜாபாத் அவளூர் தரைப்பாலம் மூடப்பட்டு போக்குவரத்திற்கு தடை

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பாலாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் வாலாஜாபாத் அவளூர் தரைப்பாலம் மூடப்பட்டு போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.


வாலாஜாபாத்தில் இருந்து தரைப் பாலத்தின் வழியாக செல்லும் 20க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு.

 கடந்த சில தினங்களாக தமிழக ஆந்திர எல்லையோரங்களில் பெய்த மழையின் காரணமாகவும் ஆந்திர மாநில நீர்த்தேக்கங்களில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள மழை வெள்ள உபரிநீர்  பாலாற்றில் திறந்துவிடப்பட்டுவேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக காஞ்சிபுரம் பாலாற்றில் வந்து கொண்டிருக்கிறது.


இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாப்பேட்டை பூண்டி  அணைக்கட்டிலிருந்து சுமார் 12,301 கன.அடி வெள்ள உபரிநீர் பாலாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்றில் அதிக அளவில் வெள்ள நீர் செல்லும் என்பதால்  காஞ்சிபுரம் மாவட்டத்தில்  காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஆகிய தாலுகாவிலுள்ள 50 கரையோர கிராமப்புற கரையோற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி விடுத்துள்ளார்.

இந்நிலையில் வாலாஜாபாத் அருகே உள்ள வாலாஜாபாத் - அவளூர் செல்லும்  சாலையில் உள்ள தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால் போக்குவரத்தினை தடை செய்யவும் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி வாலாஜாபாத் அவளூர் தரைப்பாலத்தில் போக்குவரத்தினை தடை செய்து தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தி உள்ளனர்.


இதன் காரணமாக வாலாஜாபாத்தில் இருந்து அவளூர் தரைப்பாலம் வழியாக செல்லும் அவளூர் அங்கம்பாக்கம், கன்னடியன் குடிசை, கம்மராஜபுரம், தம்மனூர்,வள்ளி மேடு, இளையனார்வேலூர் காவாந்தண்டலம் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments