தேசிய யோகாசனப் போட்டி காஞ்சிபுரம் சகோதரர்கள் இருவருக்கு தங்கப்பதக்கம்
காஞ்சிபுரம், டிச.20:
காஞ்சிபுரம் சி.எம்.சுப்பிரமணிய முதலியார் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் பயின்று வரும் சகோதரர்களான கே.சர்வேஷ்(12) கே.தேவேஷ்(12) இவர்கள் இருவரும் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் கடந்த டிசம்பர் 16 முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை பொள்ளாச்சியில் நடத்திய தேசிய யோகாசனப் போட்டியில் தங்கம் வென்றுள்ளனர்.
இவர்களை காஞ்சிபுரம் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல், யோகாசன பயிற்சியாளர் யுவராஜ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அரசுப்பள்ளியில் பயின்று வரும் இச்சகோதரர்கள் தங்கம் வென்று காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Post Comment
No comments
Thank you for your comments