Breaking News

உறங்கிய ஊழியரை கண் மூடித்தனமாக தாக்கிய தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் - வீடியோ வைரல்!


 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரத்தில் பணியின் போது உறங்கிய ஊழியரை கண் மூடித்தனமாக தாக்கிய தனியார் தங்கும் விடுதி உரிமையாளர். 

காயம் அடையும் வகையில் தாக்கிய உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி, சிசிடிவி காட்சிகளுடன் ஊழியரின் குடும்பத்தினர் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு.

தனியார் விடுதி உரிமையாளர் ஊழியரை கண்முடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பு. 

காஞ்சிபுரம் மாநகராட்சி அஸ்டபுஜம் தெற்கு மாட வீதி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் கோகுல்நாத் வயது 21.  இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் காஞ்சிபுரம் மேட்டு தெரு பகுதியில் உள்ள டி.எம். இன் தனியார் தங்கும் விடுதியில் பணிக்கு சேர்ந்து உள்ளார். 



கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பணி செய்து வரும் நிலையில் தனியார் தங்கும் விடுதியில் வரவேற்பாளர் பணிக்குச் சேர்ந்த கோகுல்நாதை , தங்கும் விடுதி உரிமையாளர்  டி .முருகேசன்  விடுதியில் உள்ள அனைத்து பணிகளுக்கு ம் பயன்படுத்தி உள்ளார். 

இருப்பினும் குடும்ப வறுமை காரணமாக சகித்துக் கொண்டு பணியாற்றி வந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி பணியில் இருந்த போது அசதியின் காரணமாக கண் அயர்ந்து உறங்கி உள்ளார்.

இதனை தற்செயலாக விடுதிக்கு வந்த உரிமையாளர் முருகேசன் பார்த்துவிட்டு கோகுல் நாத்தின் தலைய பிடித்து ஆட்டி, கையை முறித்து, மூக்கை பிடித்து இழுத்து என கண்மூடித்தனமாக தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசி  எச்சரிக்கை செய்துவிட்டு சென்று உள்ளார்.

ஏற்கனவே ஊழியர் கோகுல் நாத்தின் மூக்கில் அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் மீண்டும் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி உள்ளது. இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை உள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து அறிந்து கோகுல் நாத்தின்  குடும்பத்தினர் தனியார் தங்கும் விடுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆதாரத்தோடு கோகுல்நாத்தை கண் மூடித் தனமாக தாக்கிய தனியார் விடுதி உரிமையாளர் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.

இந்த நிலையில் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் முருகேசன், அசதியின் காரணமாக உறங்கிய ஊழியரை கண் மூடித் தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Thank you for your comments