Breaking News

நாளை முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் ஆரம்பம் - மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  ‘உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் ஆரம்பம் என்று   மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்  தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், 

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு சட்டமன்ற பேவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்ததன்படி, ”உங்களுடன் ஸ்டாலின்" என்கிற இத்திட்டத்தின் கீழ் 

அடங்கிய பகுதிகளில் உள்ள 3,65,266 குடியிருப்புகளில், 1,20,448 குடியிருப்புகளுக்காக 69 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் உள்ள 2,44,818 குடியிருப்புகளுக்காக 155 முகாம்களும் ஆக மொத்தம் 224 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

  இதில் முதற்கட்டமாக ஜூலை 15.07.2025 முதல் ஆகஸ்ட் 14.08.2025 வரை நகர்ப்புற பகுதிகளில் உள்ள 52,189 குடும்பங்களுக்காக 25 முகாம்களும்,, ஊரகப்பகுதிகளில் உள்ள 1,51,140 குடும்பங்களுக்காக 53 முகாம்களும் ஆக மொத்தம் 2,03,329 குடும்பங்களுக்கு 78 முகாம்கள் நடைபெறவுள்ளது.

 15.07.2025 ஆம் நாளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கி வைக்கப்பட்டு தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்டப்பட்ட  கோகுலம் சத்திரம், குன்றத்தூர் நகராட்சி சமுதாய கூடம் (குன்றத்தூர் நகராட்சி வார்டு எண்: 1,2,3), உத்திரமேரூர் பேரூராட்சியில்  ராயர் தெருவில் உள்ள ஜெயா திருமண மண்டபம், உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி ஊராட்சியில் பெரிய நாயகி மஹால், மற்றும் குன்றத்தூர் பெருநகராட்சி, கோவூர் தனலட்சுமி ஹால் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது.

 உங்களுடன் ஸ்டாலின் முகாம் காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடைபெறும்.  இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். வருவாய்த் துறையின் மூலம் பட்டா மாறுதல், இணையவழி பட்டா, வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்துச் சான்றிதழ்கள் வழங்கும் சேவைகள் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான சேவைகளும் வழங்கப்படும்.

நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறையின் மூலம் குடிநீர் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு மற்றும் இதர அடிப்படை வசதிகள் குறித்தான சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்கள் / சேவைகளை விவரித்து அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.

 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முகாமிலும் 4 மேசைகளில் 4 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் (ITK Volunteers), அவர்களுக்கு உதவி செய்ய 4 நபர்களும், மேற்பார்வை செய்திட தனி வட்டாட்சியர் நிலையில் ஒரு நபரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ”உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 212 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து பொதுமக்களிடையே விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 1) பொதுமக்கள் கூடும் இடங்களில் பேனர் அமைத்தல், 2) ஆட்டோ மூலம் விளம்பரம், 3) LED TV அமைத்து விளம்பரம், 4) உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரம்,

5) அனைத்து அரசு அலுவலகங்களிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்த பேனர்கள் (ம) Standees Scrolls விளம்பரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக ”உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி, 07.07.2025 முதல்  வழங்கப்பட்டு வருகிறது.  அதனைத் தொடர்ந்து 15.07.2025 முதல் முகாம்கள் நடைபெறவுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளன்று பொதுமக்களின் விண்ணப்பங்களை கணினியில் பதிவு செய்ய கணினி உதவி மேசை (Computer Registration Help Desk) அமைக்கப்பட்டு, ஒவ்வொரு முகாமிற்கும் 7 கணினியுடன் கூடிய 5 அச்சுப்பொறிகள் (Printers), துறை சார்ந்த அலுவலர்களின் கணினிகளுக்கும் சேர்த்து இணையசேவை வழங்கப்படும். 

பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாத்திடவும் ஒவ்வொரு முகாமிலும் காவல்துறையின் மூலம் May I Help You சேவை வழங்கப்படும்.

அரசு திட்டங்கள் மக்களின் இல்லத்திற்கே சென்று சேரும் ”உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் காஞ்சிபுரத்தில் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் ஆரம்பம். அனைவரும் பங்கு பெறுவீர்.  பயன்படுத்திக் கொள்வீர் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments