மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவ பொம்மை எரிப்பு!
ஆதித்தமிழர் பேரவை மாநில இளைஞரணி செயலாளர் கோவை ராவணன் அதிரடி கைது. நாடாளு மன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் பெயரை அடிக்கடி கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறினால் புண்ணியமாவது கிடைக்கும் என கூறியது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் பல விதமான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை மாநில இளைஞரணி செயலாளர் கோவை ராவணன் தலைமையில் உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
ஆதித்தமிழர் பேரவையினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவ பொம்மையை எரித்தனர் அருகில் இருந்த காவல்துறையினர் விரைந்து உருவ பொம்மையை கைப்பற்றி தீயை அணைத்தனர் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் அதிரடியாக கைது செய்தனர்.கைது செய்து வேனில் ஏற்றும்போது ஆதித்தமிழர் பேரவையினர் மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர் மேலும் பதவி விலக வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அகிலன் மற்றும் மாவட்ட தலைவர் குப்புராஜ் மாநகர மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் மாநகர மாவட்ட இளைஞரணி செயலாளர் பவித்ரன் மாவட்ட துணை செயலாளர் கார்த்திக் ஆகியோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments
Thank you for your comments