அச்சிறுபாக்கம் கிளை நூலகத்தில் மனிதநேய உறவுகள் அறக்கட்டளை சார்பில் ஒரு மரம் ஒரு புத்தகம் திட்டம் அறிமுகம்

செங்கல்பட்டு மாவட்டம்  அச்சிறுபாக்கம் கிளை நூலகத்திற்கு போட்டி தேர்வு  புத்தகங்களை இலவசமாக வழங்கிடும் நூலக வாசகர்களுக்கு மனிதநேய உறவுகள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகளை வழங்கும் ஒரு மரம் ஒரு புத்தகம் திட்டத்தினை அச்சிறுபாக்கம் கிளை நூலக வாசகர் வட்ட துணைத் தலைவரும் மனிதநேய உறவுகள் அறக்கட்டளை நிறுவனருமான அச்சிறுபாக்கம் எஸ்.எம். ஷாஜஹான் அறிமுகம் செய்து வைத்தார்.


அப்போது அவர் கூறியதாவது "நாம் அறியாத யாரா ஒருவரால் ஒரு கனி தரும் மரம் நடப்பட்டு சில ஆண்டுகளுக்கு பிறகு காய், கனிகளை தருகிறது அது தொடர்ந்து பலருக்கும் பயனை எப்படி தருகிறதோ அதைப் போன்றே நூலகத்திற்கு நாம் வழங்கிடும் புத்தகங்கள் நம் காலத்திலும் நமக்கு பிறகும் பலருக்கும் பயன்படும் இது போன்ற அறப்பணிகளில் ஈடுபட்டு வருகின்ற நூலக வாசகர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் மரக்கன்றுகளை வழங்குவதாக கூறினார்.



இந்நிலையில்  அச்சிறுபாக்கம் கிளை நூலகத்திற்கு நூலக வாசகர்கள் போட்டி தேர்வு துணை புத்தகங்களை வழங்க அச்சிறுபாக்கம் கிளை நூலகத்தின் நூலகர் ப.ஜெயகாந்தன் பெற்றுக் கொண்டார். நூலகத்திற்கு போட்டி தேர்வு துணை புத்தகங்களை வழங்கிய நூலக வாசகர்களுக்கு அச்சிறுபாக்கம் கிளை நூலக வாசகர் வட்ட துணைத் தலைவரும் மனிதநேய உறவுகள் அறக்கட்டளை நிறுவனருமான அச்சிறுபாக்கம் எஸ்.எம். ஷாஜஹான்  மரக்கன்றுகளை வழங்கினார். இந்நிகழ்வில் நூலக வாசகர்கள் செ.சதீஷ், ஜி.அரிகிருஷ்ணன், வி. ஜி.லோகு, ம.செந்தில்,‌ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments