ரூ.2.76 கோடி மதிப்பிலான டிராக்டர் மற்றும் இ- கார்டுகளை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கு ரூ.2.76 கோடி டிராக்டர் மற்றும் இ- கார்டுகளை இன்று (01.08.2023) மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கி, வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கு, ரூ.44,57,500/- மதிப்பிலான 5 டிராக்டர்களை குன்றத்தூர் ஊராட்சி பயன்பாட்டிற்காகவும் மற்றும் ரூ.2,31,44,156/- மதிப்பிலான 79 இ-கார்டுகளை குன்றத்தூர் ஊராட்சி பயன்பாட்டிற்காகவும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை திரு.ஆ.மனோகரன், குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி. சரஸ்வதி மனோகரன் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
Post Comment
No comments
Thank you for your comments