மகளிர் சுய உதவிக்குழுவிளனர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த அரிய வாய்ப்பு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த அரிய வாய்ப்பு குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த பூமாலை வணிக வளாகத்தில் சுழற்சி முறையில் கடைகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



கடன் செயலி (LOAN APP) மோசடி 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-காஞ்சிபுரம் மாவட்டம், ரயில்வே ரோட்டில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட தினசரி கடைகள், மாத வாடகை கடைகள், 6 மாத வாடகை கடைகள் என சுழற்சி முறையில் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தலைமை அலுவலகத்திலிருந்து வரப்பெற்ற வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  

அதன்படி,

  •  மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள நபராக இருத்தல் வேண்டும்.
  •  குழுவின் பதிவேடுகள் முறையாக பராமரித்திருத்தல் வேண்டும்.
  • மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள அனைத்து நபர்களிடமும் ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்றி அதன் நகல் இணைக்கப்பட வேண்டும்.
  •  குழுவின் வங்கி கணக்கு புத்தக நகல் இணைக்கப்பட வேண்டும்.
  • எந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்களோ அந்த தொழில் குறித்த புகைப்படம் இணைக்க வேண்டும்.

எனவே கடை வேண்டி விண்ணப்பிக்கும் தகுதியான மகளிர் சுய உதவிக்குழுக்கள் மேற்கண்ட ஆவணங்களை இணைத்து திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் – 631 501 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். 

மேலும் விவரங்களுக்கு உதவி  திட்ட  அலுவலர் (கணக்கு மற்றும் நிர்வாகம்) – 9444094282 மற்றும் உதவி திட்ட அலுவலர் (வாழ்வாதாரம்) – 9444094285 ஆகியோரை தொடர்பு கொண்டு மகளிர் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தி தரப்படும் விற்பனை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீ: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments