தேவிரியம்பாக்கத்தில் இலவச யோகா பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா
காஞ்சிபுரம், ஜூலை 11:
உலக சமுதாய சேவை சங்கம் மற்றும் ரெனால்டு நிசான் நிறுவனம் ஆகியன இணைந்து தேவரியம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் கிராமிய சேவைத் திட்டத்தினை தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து 7 மாதங்களுக்கு நடைபெறவுள்ள இத்திட்டத்தின் தொடக்க நிகழ்வாக இலவச யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
யோகா பயிற்சியாளர்கள் சற்குணம் மற்றும் சிவசங்கரி ஆகியோர் யோகா பயிற்சியை நடத்தினார்கள். யோகா பயிற்சியின் போது நோயற்ற வாழ்வு, முதியோரை பாதுகாத்தல்,சுற்றுப்புற சுகாதாரம், குடும்ப அமைதி, மனித நேயம் ஆகியன குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மருத்துவர் ஆர்.வசுமதி தலைமையில் இலவச பொது மருத்துவ முகாமும்,புவனேசுவரி தலைமையில் மனநல ஆலோசனை முகாமும் நடைபெற்றது.
நிறைவாக திருச்சி அருமைக்கலை காரியாலயத்தின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments