கிழம்பி கிராமத்தில் 216 அரிசி மூட்டைகள் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டம் கிழம்பி கிராமத்தில்  216 மூட்டைகளில் சுமார் 7950 கிலோ பொது விநியோக திட்ட அரிசி எவ்வித ஆவணங்கள் இன்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றபட்டுள்ளது என மாவட்ட  ஆட்சித் தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், கீழம்பி கிராமத்தில் பொது விநியோகத் திட்ட அரிசி கடத்துவதாக மாவட்ட ஆட்சியருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் 28.06.2023 அன்று சுமார் இரவு 9.00 மணியவில் காஞ்சிபுரம் குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர், குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு காவல் துறையினருடன் ஆய்வு மேற்கொண்டதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த TN 05 CF 7085 (TATA 1212 Container Coach) மற்றும் TN 10 BS 2136 வாகனங்களில் 216 மூட்டைகளில் சுமார் 7950 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி எவ்வித ஆவணங்களும் இன்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றுகை செய்யப்பட்டது.

கைப்பற்றுகை செய்யப்பட்ட அரிசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், திருப்பெரும்புதுர் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டும், வாகனங்கள் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல் துறையிடமும் ஒப்படைக்கப்பட்டு இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரிகளை கண்டுபிடிக்க காவல் துறையால் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments

Thank you for your comments