புணரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம் இரயில்வே ரோட்டில், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் புணரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் திறந்து வைத்து, கடைகளில் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான கடை ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 6,40,000/- மதிப்பில் கடன் உதவிகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், தலைமைச் செயலகத்தில் இன்று (28.06.2023) பூமாலை வணிக வளாக கட்டிடங்களை காணொளிக்காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்ததை தொடர்ந்து, காஞ்சிபுரம் இரயில்வே ரோட்டில் பூமாலை வணிக வளாகத்தை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் திறந்து வைத்து, கடைகளில் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான கடை ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 6,40,000/- மதிப்பில் கடன் உதவிகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் இரயில்வே ரோடு, பூமாலை வணிக் வளாகம் புணரமைக்கப்பட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் வணிக வளாகத்தின் முகப்பு பகுதி அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் 2022-2023 ஆம் ஆண்டில் ரூ.3.90 இலட்சம் மதிப்பீட்டில் முகப்பு பகுதி மறுசீரமைக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 27 மாவட்டங்களில் பூமாலை வணிக வளாக கட்டிடங்களை காணொளிக்காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் இரயில்வே ரோட்டில், தலைமை தபால் அலுவலகம் எதிரில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, அங்குள்ள கடைகளில் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திடும் பொருட்டு தினசரி கடைகள்-10, மாத வாடகை அடிப்படையிலான கடைகள் -5 மற்றும் ஆறு மாத காலத்திற்கான கடைகள் -11 என கடைகள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளின் ஆணைகளை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க. செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மகளிர் திட்ட இயக்குநர் திருமதி. கவிதா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments