Breaking News

காஞ்சிவரதர் கோயில் மணியக்காரர் பணியிட மாற்றம்

காஞ்சிபுரம், ஜூலை 17:

காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் மணியக்காரராக பணிபுரிந்து வந்த து.கிருஷ்ணகுமார் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நரசிம்ம சுவாமி கோயிலுக்கு வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.


இது குறித்து காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் உதவி ஆணையர் ஆர்.ராஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் மணியக்காரராக து.கிருஷ்ணகுமார் பணியாற்றி வந்தார்.இவர் தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நரசிம்மசுவாமி கோயிலுக்கு பணியிட மாற்றம் செய்வதுடன் வியாழக்கிழமையுடன் பணியிலிருந்து விடுவித்தும் உத்தரவிடப்படுகிறது.

இவருக்கு பதிலாக வரதராஜசுவாமி கோயிலில் மடப்பள்ளியில் பண்டக அறைக் காப்பாளராக பணியாற்றி வரும் ப.கிருஷ்ணன் மணியக்காரராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோயில் நகைக் கணக்கு பொறுப்புகளை கோயிலில் சீட்டு விற்பனையாளராக பணியாற்றி வரும் எஸ்.ஆனந்தா சர்மாவிடம் வழங்கப்பட்டிருப்பதாகவும் உதவி ஆணையர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments

Thank you for your comments