கட்டணமில்லா TNUSRB தேர்வு பயிற்சி பெற அழைப்பு... மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்

கோவை:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இத்தேர்விற்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், நேரிடையாக பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மாதத்திலிருந்து வார இறுதி நாட்களில் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை)  துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 04.04.2022  திங்கட்கிழமை அன்று மதியம் 3.00 மணியளவில் அறிமுக வகுப்பு நடைபெறும். 

மனுதாரர்கள் TNUSRB தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவத்துடன் இந்த அறிமுக வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பிற்கு தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். 

 காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா) SUB-INSPECTORS OF POLICE (TALUK): 399 (ஆண் - 279, பெண்/ மதிருநங்கை - 120), காவல் உதவி ஆய்வாளர் (ஆயுதப்படை) SUB-INSPECTORS OF POLICE (ARMED RESERVE): 45 (ஆண் - 32, பெண்/ திருநங்கை - 13) என மொத்தம் 444 பணிக்காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC, BC (M), MBC/DNC பிரிவினர் 32 வயது வரையிலும், SC, SC(A), (ST) மற்றும் திருநங்கைகள் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். 

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி. 07.04.2022.                          

  விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  https://si2022.onlineregistrationform.org/TNU/LoginAction_input.action  என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் இத்தேர்விற்கான பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்  https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்வையிட்டு தேவைப்படும் தகவல்களை திரட்டி தேர்விற்கு தயார் செய்து கொள்ளலாம். 

போட்டித்தேர்வு எழுதி அரசு வேலைவாய்ப்பு பெற விரும்புவோர் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்  தெரிவித்துள்ளர்.

வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கோயம்புத்தூர்.


No comments

Thank you for your comments