ஒசூர் வீட்டு வசதி பிரிவு சார்பில் விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கும் முகாம்
தருமபுரி :
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் ஒசூர் வீட்டு வசதி பிரிவு சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத்தொகை செலுத்தி, விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கும் முகாம் ஒசூர் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் 5 நாட்கள் நடைபெறுகிறது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச. திவ்யதர்சினி தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூர் வீட்டு வசதி பிரிவு சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத்தொகை செலுத்தி, விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்களுக்கு 04.04.2022 திங்கட்கிழமை முதல் 08.04.2022 வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கும் முகாம் ஒசூர் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு முழுத்தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரர்கள் விற்பனை பத்திரம் வழங்கும் இச்சிற்ப்பு முகாமில் உரிய அனைத்து ஆவணங்களுடன், கலந்துகொண்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விதிமுறைகளை பின்பற்றி ஒதுக்கீடுதாரர்கள் விற்பனை பத்திரம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச. திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி - மக்கள் தொடர்பு அலுவலகம், தருமபுரி மாவட்டம்.
No comments
Thank you for your comments