கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் கிணத்துக்கடவு ஒன்றியம் சொலவம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சிக்கலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து கலைஞரின் வரும் முன் காப்போம் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்ராசு எ செந்தில்குமார். துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன். மாவட்ட கவுன்சிலர் எம் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
யூனியன் கவுன்சிலர் ஜெஜெ ஜெகன் கலாமணி வரதராஜ் ராமசாமி மதுக்கரை துணை பெருந்தலைவர் எம்ஆர் ஆர் பிரகாஷ் ஊராட்சி மன்ற தலைவர்கள் அபின்யா அசோக்குமார், ராம்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமார் தனலட்சுமி மற்றும் கோவை முதல்வர் காப்பீட்டு திட்டம் ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் மற்றும் கழக உறுப்பினர்கள் விமல் ரங்கநாதன் பிரகாஷ் வெள்ளிங்கிரி சுகாதார அலுவலர் சித்ரா பிரபு குணசேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.
தனியார் மருத்துவமனை சார்பாக எஸ் எல் பி மருத்துவமனை டாக்டர் சுரேஷ் வெங்கடாசலம் பிஆர்ஓ பாலமுருகன் டாக்டர் வினித் பொது மேலாளர் பாலு மற்றும் கே ஜி மருத்துவமனை டாக்டர் சந்தோஷ் குமார் தலைமையில் அடங்கிய மருத்துவக் குழுவினர் இருதய பரிசோதனை முகாமிட்டனர். மேலும் ராமகிருஷ்ணா மருத்துவமனை முகாமிட்டு பொதுமக்களுக்கு இலவச பரிசோதனை நடைபெற்றது.
Post Comment
No comments
Thank you for your comments