ஏழை நெசவாளரின் குடும்பத்துக்கு மாற்றுத்திறனாளிகள் பொருள் உதவி



படவிளக்கம்:காஞ்சிபுரத்தில் ஏழை நெசவாளர் ஜி.மணியின் குடும்பத்தினருக்கு மளிகைப்பொருட்கள் வழங்கிய மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள்

காஞ்சிபுரம், ஜூலை 9:

காஞ்சிபுரத்தில் ஏழை நெசவாளரின் குடும்பத்தினருக்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் மளிகைப் பொருட்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூரில் வசித்து வந்தவர் ஜி.மணி(41) இவர் அண்மையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்.இவரது குடும்பத்தினரை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பெ.ப.பாலாஜி, பொருளாளர் ஹரிகிருஷ்ணன்,ஒன்றிய செயலாளர் வி.பாலாஜி,நகர் தலைவர் எம்.லோகநாயகி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர் அக்குடும்பத்தினருக்கு அரிசி,பருப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும் வழங்கினார்கள்.

பின்னர் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் நலம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அக்குடும்பத்தினருக்கு ரூ.10 ஆயிரம் நதியுதவியும் வழங்கப்பட்டது.ஜி.மணியின் குடும்பத்தினரும் உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


No comments

Thank you for your comments