Breaking News

20 பழங்குடியின குடும்பங்களுக்கு சோலார் மின் விளக்குகள் வழங்கியது காஞ்சிபுரம் குழந்தைகள் கண்காணிப்பகம்

காஞ்சிபுரம், டிச.8:

காஞ்சிபுரம் அருகேயுள்ள கிராமங்களில் நீர்நிலைகளையொட்டி குடிசைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை கண்டறிந்து 20 குடும்பங்களுக்கு சோலார் மின் விளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் அருகேயுள்ள தண்டரை,ஆர்ப்பாக்கம்,நீர்வள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஏரிகள்,குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளையொட்டி வசிக்கும் பழங்குடியின குடும்பங்கள் 20 கண்டறியப்பட்டு அவர்களுக்கு சோலார் மின் விளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழங்குடியின மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வரும் குழந்தைகள் கண்காணிப்பகத்தின் நிர்வாகி து.ராஜி சோலார் மின் விளக்குகளை வழங்கினார்.

பின்னர் அவர்களுக்கு சோலார் மின்விளக்குகளை பயன்படுத்தும் முறை குறித்து செயல்முறை விளக்கமும் அளித்தார்.இதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில் நீர்நிலைகளான ஏரிக்கரைகள், குளங்கள் ஆகியனவற்றில் வசிப்பவர்களுக்கு மின் இணைப்பு கிடைப்பதில்லை.

இரவு நேரங்களில் அவர்கள் படிக்கவும்,பாம்பு,பூச்சி போன்றவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் சோலார் மின் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

No comments

Thank you for your comments