காஞ்சிபுரத்தில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம்
காஞ்சிபுரம், ஜூன் 2:
காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் சனிக்கிழமை ஆசிரியர் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
படவிளக்கம்: பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார் சென்னை பல்கலைக்கழக அணு இயற்பியல் துறை பேராசிரியரும்,இயக்கநருமான ஏ.ஸ்டீபன்
காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிக் கருத்தரங்கம் கல்லூரியின் கலையரங்க கூடத்தில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்லூரியின் நிறுவனர் பா.போஸ் தலைமை வகித்தார்.தாளாளர் அ.அரங்கநாதன்,தலைவர் வி.ஜெயக்குமார், செயலாளர் கே.வீரராகவன், பொருளாளர் மல்லிகா மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் கு.வெங்கடேசன் வரவேற்று பேசினார்.
சென்னை பல்கலைக்கழக அணு இயற்பியல் துறை பேராசிரியரும்,இயக்குநருமான ஏ.ஸ்டீபன் கல்வி மற்றும் நிர்வாகச் சிறப்பை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு என்ற தலைப்பில் பயிற்சியளித்தார்.
பின்னர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.நிறைவாக துணை முதல்வர் ம.பிரகாஷ் நன்றி கூறினார். கருத்தரங்கில் கல்லூரியின் அனைத்துத்துறை தலைவர்கள்,பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Post Comment
No comments
Thank you for your comments