தருமபுரியில் தனி பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கள்ளக் காதலியை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்றார் – சிறையில் அடைப்பு | BCID Police Sub-Inspector Arrested for Attempting to Kill Lover in Dharmapuri
தருமபுரி :
ராஜாராம், கோமதியை அதியமான்கோட்டை அருகே ஒட்டப்பட்டியில் வாடகை வீடு எடுத்து தங்கவைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை அவரது மனைவி அறிந்ததும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கோமதியுடன் உள்ள உறவை முறிக்க ராஜாராம் முயன்றதாகவும் கூறப்படுகிறது.
அமாவாசை நாளன்று பரிகார பூஜை செய்வதற்காக ஒட்டப்பட்டி பெருமாள் கோவிலுக்கு கோமதியை அழைத்துச் சென்ற ராஜாராம், அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில், அருகிலிருந்த கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்றதாக கோமதி போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, SBCID உதவி ஆய்வாளர் ராஜாராமை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
No comments
Thank you for your comments