காஞ்சிபுரம் புத்தவிகாரை சுத்தம் செய்த காப்பீட்டு நிறுவன ஊழியர்கள்
காஞ்சிபுரம்,செப்.23:
காஞ்சிபுரத்திலிருந்து வையாவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது புத்தர் ஆலயம்.இந்த ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளை காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தி நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் மத்திய அரசின் சுவக்ஷதா ஹை சேவா என்ற பிரச்சாரத்தின் பேரில் பொது இடங்களில் துப்புரவின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
துப்புரவுப் பணியாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக அவர்களோடு இணைந்து நிறுவனத்தின் கோட்ட மேலாளர் டி.அபிஷேக் தலைமையில் காப்பீட்டு நிறுவன பணியாளர்கள் ஈடுபட்டனர்.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் கிரிஜா சுப்பிரமணியன்,சென்னை மண்டல மேலாளர் எம்.வி.சந்திர சேகர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி துப்புரவுப்பணி மேற்கொண்டதாக காப்பீட்டு நிறுவன பணியாளர்கள் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments