Breaking News

மாநகராட்சி வடக்கு மண்டலத்தி ற்குட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்....!



கோவை மணியகாரம் பாளையம் பகுதியில் தனியார் மண்டபத்தில்   நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமசந்திரன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு உடனடி ஆணைகளை வழங்கினார். இந்த சிறப்பு வாய்ந்த முகாமில் பல்வேறு  துறைகளை சார்ந்த 400க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட்டது.இதில் சொத்து வரி பெயர் மாற்றம், மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றம், ஆதார் கார்டு பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்நிகழ்வில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையர் செந்தில்குமரன்,  மாமன்ற உறுப்பினர்கள் கல்பனா ஆனந்தகுமார், ராதா கிருஷ்ணன்,சரண்யா செந்தில்குமார், மற்றும்  உதவி வருவாய் அலுவலர் அஸ்கர்பாஷா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொது மக்கள் உட்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments