காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் சீரமைப்பு
வேலூர்:
காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்டது 1 மாத காலமாக வேலூர் மாவட்டத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லை.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பாலாற்றில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது.
மேட்டூரில் இருந்து சேலம் கிருஷ்ணகிரி வழியாக வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு வரக்கூடிய இந்த காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் பாலாற்று வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது.
அதனால் தற்போது வேலூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், தற்போது படிப்படியாக பாலாற்றில் வெள்ளம் குறைந்துள்ளதால் அதை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
🔥 முக்கியச் செய்திகள்
👌 லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி பறிமுதல்
👌 மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்
👌 போதையில் ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.!
👌 முதல்வர் ஸ்டாலினின் எதிர்கால திட்டங்கள் என்ன...? தெலங்கானா முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன..?👌 கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்... முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டும் ஹெச்.ராஜா..
No comments
Thank you for your comments