பொருளாதார மேம்பாடு திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்
நாமக்கல்:
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாடு திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. நிலம் வாங்கும் திட்டம்
பெண்களுக்கானது, 18 வயது முதல் 65 வயதிற்குள்ளாக இருக்கவேண்டும். விண்ணப்பதாரர் விவசாயத்தைத் தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் எதுவும் பெற்றிருக்கக்கூடாது.
நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அல்லாத பிற இனத்தைச் சார்ந்தவராக இருக்கவேண்டும். இத்திட்டத்தின்கீழ் நிலமற்றவர் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.
சார்பதிவாளர் அலுவலக இணையதளம் வாயிலாக அல்லது நேரில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு பெறப்படவேண்டும். இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
வாங்கப்படும் நிலத்தினை விண்ணப்பதாரர் 20 வருடங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. நிலம் வாங்கியவுடன் 20 வருடங்களுக்க விற்பனை செய்யாதவாறு வில்லங்கம் (Line) ஏற்படுத்தவேண்டும்.
நிலம் வாங்கும் திட்டத்திற்கு மூல பத்திரம் விற்பனை உடன்படிக்கை பத்திரம். வில்லங்க சான்று, சர்வே எண், சிட்டா அடங்கல், நில பத்திரம் மற்றும் நிலம் விற்பவரது சாதி சான்று விவரங்களை பதிவு செய்து ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
2. நிலம் மேம்படுத்துதல்
இருபாலருக்கும், இத்திட்டத்தின்கீழ் நிலத்தை மேம்படுத்துதல். ஆழ்குழாய் கிணறு / திறந்தவெளி கிணறு, பம்செட் அமைத்தல், சொட்டுநீர் பாசனம் மற்றும் சுழல்முறை நீர்ப்பாசனம் அமைத்தல் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டங்களில் பயன்பெற விரும்புபவர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
3.தொழில் முனைவோர் திட்டங்கள்
விண்ணப்பதாரர் ஆதிதிராவிட இனத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும். வயதுவரம்பு 18 முதல் 65 வரை. குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ2.00 இலட்சம் ஆகும். விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்ககூடாது.
விண்ணப்பதாரர் தொழில் புரிவதற்காக கடன் மற்றும் மானியம் பெறப்பட்ட மாவட்டத்திலேயே தொழில்புரிய வேண்டும். கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு விண்ணப்பிப்பவர்கள் வாங்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை. விலைப்பபுள்ளி, திட்ட அறிக்கை. மருத்துவ உடல் தகுதிச்சான்று ஆகியவற்றை அந்தந்த மாவட்டங்களிலுள்ள கால்நடை பராமரிப்பு துறை அலுவலர் / அரசு கால்நடை மருத்துவரிடம் பெற வேண்டும். பால்பண்ணை திட்டங்களுக்கு ஆவின் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யவேண்டும். வாகனத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர் ஓட்டுநர் உரிமம் மற்றும் Badge மேலொப்பம் பெற்றிருக்க வேண்டும்
4. இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம்
மருந்தியல் மருத்துவமனை, மருந்துக்கடை, கண்கண்ணாடியகம், முடநீக்க மையம், இரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல் (MBBS, BS MS, BDS, BPT D Pharm / B.Pharm. , Lab Technician / Para Medical Centre / பட்டம் / பட்டயப் படிப்பு முடித்தவர்களாக இருக்கவேண்டும்) - வயது வரம்பு 18 முதல் 45வரை குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2.00 இலட்சம் ஆகும்.
இத்திட்டங்களில் பயன்பெற விரும்பு பவர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யும் போது குடும்ப அட்டை/இருப்பிடச்சான்று, சாதிச்சான்று வருமானச்சான்று, கல்வித்தகுதி மற்றும் வயதிற்கான ஆதாரச்சான்றிற்கு (பள்ளி மாற்றுச்சான்று / வாக்காளர் அடையாள அட்டை /ஓட்டுநர் உரிமம் / பான்கார்டு /ஆதார் அட்டை/ மதிப்பெண் சான்று) விலைப்புள்ளி திட்டஅறிக்கை மற்றும் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும்.
5. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளதார கடனுதவி திட்டம்:
மகளிர் குழுவாக இருத்தல் வேண்டும். குழு உறுப்பினர்களின்; எண்ணிக்கை குறைந்த பட்சம் 12 முதல் 20 வரை இருக்கலாம். 18 வயது முதல் 65 வரை இருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சம் வரை இருக்கவேண்டும். குழுவானது மகளிர் திட்ட அலுவலகத்தில் அங்கீகரிக்கபட்டதாகவும் (SHG ID Assigned) செயல்பாட்டில் இருந்து வரும் குழுவாகவும் மகளிர் திட்ட அலுவலகத்தில் தர மதீப்பீடு செய்யப்பட்ட குழுவாகவும் இருத்தல் வேண்டும்.
பதிவு செய்யும் போது குடும்ப அட்டை / இருப்பிடச்சான்று, சாதிச்சான்று வருமானச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை பான்கார்டு / ஆதார் அட்டை / வங்கி கணக்கு புத்தகம், தீர்மான நகல் விலைப்புள்ளி திட்டஅறிக்கை மற்றும் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும்.
இத்திட்டங்களில் பயன்பெற விரும்புபவர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அரசு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here 👉அதிகாரப்பூர்வ இணையதளம் http://tahdco.com/
No comments
Thank you for your comments