மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் திட்டத்தின் கீழ் மக்களிடம் குறை கேட்பு
நாமக்கல், டிச.16-
மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் திட்டத்தின் கீழ் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் அவர்கள் குறைகளை கேட்டறிந்தார்.
நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களைத்தேடி சட்டமன்ற உறுப்பினர் திட்டத்தின் கீழ், பொது மக்களை நேரடியாக சந்தித்து நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் அவர்கள் 15.12.2021 அன்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றுக்கொண்டார்.
🔥 முக்கியச் செய்திகள்
👌 லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி பறிமுதல்
👌 மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்
👌 போதையில் ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.!
👌 முதல்வர் ஸ்டாலினின் எதிர்கால திட்டங்கள் என்ன...? தெலங்கானா முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன..?👌 கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்... முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டும் ஹெச்.ராஜா..
மக்களைத்தேடி சட்டமன்ற உறுப்பினர் திட்டத்தின்கீழ், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், லக்கபுரம், நாட்டமங்கலம், கல்யாணி, நவணி, ஏ.கே.சமுத்திரம், பாச்சல், கதிராநல்லூர் மற்றும் கண்ணூர்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களான அம்மாபாளையம், குட்டமூக்கன்பட்டி, மேட்டுபாளையம், கரட்டூர், செம்மம்பட்டி, நொச்சிப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கு நகரப்பேருந்துகளில் இலவச பயணம், கொரோனா நிவாரண உதவித்தொகை, நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளார். சுகாதாரத்துறையின் மூலம் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவிலிருந்து பொதுமக்களை பாதுகாத்துள்ளார். மேலும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார் என்று தெரிவித்தார். இந்நிகழ்வுகளில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளித்து விரைந்து தீர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தார்.
பின்னர், கல்யாணி ஊராட்சி;, பெரிய தொட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு, தலைமையாசிரியரிடம் பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.வனிதா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) சீ.கோகுல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பெரியாளர் மாதேஸ்வரன், உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments