வரலாற்றுச் சிறப்புமிக்க அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தை மூடும் முயற்சியை கைவிட வேண்டும்
செங்கல்பட்டு:
தென்னக ரயில்வே துறை வரலாற்றுச் சிறப்புமிக்க அச்சரப்பாக்கம் (அச்சிறுபாக்கம்) ரயில் நிலையத்தை மூடும் முயற்சியை கைவிட வேண்டும்... வழக்கம் போல் ரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுக்கின்றன...
🔥 முக்கியச் செய்திகள்
👌 லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி பறிமுதல்
👌 மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்
👌 போதையில் ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.!
👌 முதல்வர் ஸ்டாலினின் எதிர்கால திட்டங்கள் என்ன...? தெலங்கானா முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன..?👌 கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்... முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டும் ஹெச்.ராஜா..
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ரயில் நிலையம் வரலாற்று சிறப்பு மிக்க நூற்றாண்டுகால ரயில் நிலையம்.
தேசத்தந்தை மகாத்மா காந்தி அடிகள் 1946-ல் சிறப்பு ரயில் மூலம் மதுரை சென்ற போது அச்சரப்பாக்கத்தில் ரயில் நிலையத்திற்கு வருகைபுரிந்து விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகச்சிறப்பாக உரையாற்றினார்.
அப்படிப்பட்ட வரலாற்றை தாங்கி நிற்கும் அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தை நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டிய தருணத்தில் முற்றிலுமாக மூட ரயில்வே துறை முயற்சிக்கிறது. இதை யாராலும் ஏற்க முடியாது.
அச்சரப்பாக்கத்தில் பல மத வழிபாட்டு தலங்கள் உள்ளன. இதுதவிர, மத்திய மாநில அரசு அலுவலகங்கள், தனியார், அரசு பள்ளிகள், சுற்றுலாதலங்கள் உள்ள பகுதியாகும்.
அச்சரப்பாக்கம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள், தலைநகர் சென்னையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய தினசரி வந்து செல்கின்றார்கள். குறிப்பாக மருத்துவத்திற்காக சென்னை, மற்றும் செங்கல்பட்டு செல்கின்றவர்கள், பொது போக்குவரத்திற்கு ரயில்களை சார்ந்திருக்கின்றார்கள்.
கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக அச்சரப்பாக்கத்தில் நாள்தோறும் பயணிகள் ரயில்கள் இரு தடங்களிலும் நின்று சென்று கொண்டு இருந்தன.
ஆனால் தற்போது, அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் மூடப்பட்டும் வழக்கமாக நின்று செல்லும் ரயில்களும் தற்போது நிற்பதும் இல்லை. இதனால், ஏழை, எளிய, நடுத்தரப் பொதுமக்கள் வேலைக்கு செல்லும் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தில் வழக்கம் போல் டிக்கெட் கவுன்டர் நடைமுறைப்படுத்தி ரயில்கள் நின்று செல்ல தெற்கு ரயில்வே உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.எம்.ஷாஜஹான் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments
Thank you for your comments